)
Viral Story: வாடகை வீட்டில் வசித்த அனுபவம் உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்தால், அதனுடன் கிடைக்கும், கசப்பான, கடினமான விஷயங்களை பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்படி ஒரு மோசமான அனுபவம் பற்றி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரல் ஆகி வருகின்றது.
வீட்டு உரிமையாளருடனான கசப்பான அனுபவம்
சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது. சமீபத்தில் வீட்டை மாற்றிய ஷ்ரவன் டிக்கூ, தனது வீட்டு உரிமையாளர், தான் செக்யூரிடி டெபாசிட்டாக, அதாவது பாதுகாப்பு வைப்புத்தொகையாக கொடுத்த ரூ.1.5 லட்சத்தில் பாதிக்கும் குறைவான தொகையையே திருப்பித் தந்ததாகக் கூறினார். இத்தனை பெரிய தொகையை பிடித்தம் செய்ததற்கு அவர் தன் இஷ்டத்திற்கு பல காரணங்களை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது சோதனையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷ்ரவன் டிக்கூ, தான் அந்த 2BHK பிளாட்டில் இரண்டு வருடங்களாக வசித்த போதிலும், தான் வீட்டு உரிமையாளரிடம் நேரடியாகப் பேசியதில்லை என்றும், கட்டிட மேலாளர் மூலமாகவே அவர் தன்னை தொட்ரபு கொண்டதாகவும் தெரிவித்தார்.
“என் வீட்டு உரிமையாளர் எனக்கு முன்னால் வாடகைக்கு இருந்தவர்களுக்கும் பல தொந்தரவுகளை கொடுத்ததாக பலர் கூறியிருந்தனர். அவரை பற்றிய பல வதந்திகள் இருந்தன. ஆகையால், நான் வீடு காலி செய்யும் நேரம் வந்தபோது நான் நான் மனதளவில் தயாராக இருந்தேன்," என்று அவர் கூறினார்.
லிஃப்ட் பயன்படுத்தியதற்கு கழிக்கப்பட்ட தொகை
இருப்பினும், அதைத் தொடர்ந்து நடந்தவற்றை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவங்கள் அவரை திகைக்க வைத்தன. ஓவியம் வரைந்ததற்கு - ₹55,000, இதர சேதங்களுக்கு - ₹25,000 மற்றும் கட்டிடத்தின் லிஃப்டைப் பயன்படுத்தியதற்கு - ₹2,000 அவரிடம் வசூலிக்கப்பட்டன.
செக்யூரிட்டி டெபாசிட்டில் பாதி கூட திருப்பி கிடைக்கவில்லை
ஷ்ரவன் டிக்கூ, இந்த கட்டண்னகளுக்கான முறையான இன்வாய்ஸ்களைக் கோரினார். ஆனால் தெளிவற்ற கட்டணங்களுடன் கையால் எழுதப்பட்ட ஒரு தாளை தனக்கு வீட்டு உரிமையாளர் வழங்கியதாக அவர் கூறியுள்ளார். இறுதியில், தனக்கு ரூ.68,000 மட்டுமே திரும்பக் கிடைத்ததாகவும், அது அவர் கொடுத்த செக்யூரிட்டி அட்வான்ஸ் தொகையில் 40% க்கு சற்று அதிகமான தொகை மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"என் தவறுதான். கவனமாக செயல்படாததற்கு நான் பழியை ஏற்றுக்கொள்கிறேன்," என்று எழுதி தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். "ஆனால் உண்மை என்னவென்றால், பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்கள் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது, அவர்களை சமாளிப்பது சவாலாக உள்ளது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பெங்களூர் வீட்டு உரிமையாளர்கள் ஒரு அச்சுறுத்தலாக மாறி வருகின்றனர்," என்று ஷ்ரவன் டிக்கூ கூறியுள்ளார். "இதற்கான மாற்றம் யார் மூலமாவது கிடைக்கும் என நம்புகிறேன்" என்று எழுதி அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
ஷ்ரவண் டிக்கூவின் பதிவு வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து பலர் இதே ரீதியில் தங்களுக்கு நடந்த அனுபவங்களையும் கமெண்ட் பகுதியில் பகிர்ந்துள்ளனர். "இந்த நிலை பெங்களூருவில் மட்டுமல்ல. சென்னையில் உள்ள எனது வீட்டு உரிமையாளராலும் நான் அதே வழியில் ஏமாற்றப்பட்டேன். இந்தியாவிலும் நியாயமான வாடகை விதிமுறை இல்லை." என்று ஒருவர் கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், "எனது வீட்டு உரிமையாளர் எனது ₹4 லட்சம் வைப்புத்தொகையிலிருந்து ₹1 லட்சத்தைக் கழித்தார். நம் பணத்தை கேட்கவே நாம் பதட்டப்பட வேண்டிய நிலை பரிதாபமாக உள்ளது" என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ