Viral Stories: பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர், பலர் தங்களது கனவாக நினைக்கும் ஒரு மிகச்சிறந்த வேலையை விட்டு விலகிச் செல்ல வெண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கான காரணம் நம்மை வியப்படைய வைக்கின்றது. அவரால் வெற்றிகரமாக பணியை செய்ய முடியவில்லை என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், அவ்வாறு இல்லை. அவரது பணிச்சூழலே மெல்ல மெல்ல அவரை சோர்வடையச் செய்து அங்கிருந்து வெளியேற வைத்ததாக கூறப்படுகின்றது. என்ன நடந்தது என இங்கே காணலாம்.
வைரல் ஆகும் போஸ்ட்
பெங்களூருவில் உள்ள ஒரு AI ஸ்டார்ட்அப்பின் நிறுவனர் ஷ்ரவன் டிக்கூ, ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் கதையைப் பகிர்ந்துள்ளார். இது LinkedIn இல் வைரல் ஆகி, இப்போது ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பொறியாளரான அந்த நபர் செயல்திறன் குறைவாக இருந்ததால் ராஜினாமா செய்யவில்லை என்றும் அவரது பணியிடம் அவரை உணர்வுப்பூர்வமாக சோர்வடையச் செய்தது என்றும் இதன் காரணமாக அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார் என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
G-Meet -இல் அழுதேன்...
"ஒரு பிராஜெக்ட் குறித்து தெளிவு கேட்டதால் நான் G-Meet இல் அழ வெண்டிய சூழலே ஏற்பட்டது. அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது," என்று அந்த பொறியாளர் டிக்கூவிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஊழியருக்கு ஆன்போர்டிங் அல்லது கட்டமைப்பு ஆதரவு வழங்கப்படவில்லை என்று டிக்கூ விளக்கினார். அதற்கு பதிலாக, அனைத்து செயல்முறைகள் பற்றியும் தாமே கண்டறிய வேண்டும் என அந்த நிறுவனத்தில் எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. "அந்த ஊழியருக்கு எதிலும் தெளிவான அறிவுறுத்தல்களோ பயிற்சிகளோ அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அவரால் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், அந்த நிலையிலும் அவருக்கு தேவையான வழிகாட்டுதல்கள் கிடைக்கவில்லை, மாறாக, பொதுவெளியில் அவமானமே கிடைத்தது" என ஷ்ரவன் டிக்கூ அந்த ஊழியரின் பரிதாப நிலையை எடுத்துரைத்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் கொடுக்கபட்ட அழுத்தம் அதோடு முடியவில்லை. அந்த பணியாளரின் மேலாளர் அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் அழைத்து, அவர் மீது பழி போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் டிக்கூ கூறினார். இறுதியாக, மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பொறியாளர் ராஜினாமா செய்தபோது, "வேறொரு வேலையில் சேர வாழ்த்துக்கள். நீங்கள் எவ்வளவு காலம் அங்கு நீடிக்கிறீர்கள் என்று பார்ப்போம்." என்று அவரிடம் கூறப்பட்டது.
"இது நச்சுத்தன்மை வாய்ந்த செயல் மட்டுமல்ல. இது ஒரு அபாயகரமான செயல்" என்று டிக்கூ கூறினார். "மக்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதில்லை. அவர்களின் கண்ணியம் இனி பாதுகாப்பாக இல்லை என்ற நிலைமியயை உருவாக்கும் சூழல்களை விட்டுச் செல்கிறார்கள்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனது பதிவில், கடினமான வேலைகளைக் கூட அர்த்தமுள்ளதாக உணர வைக்கும் நல்ல மேலாளர்களை மதிக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தினார். "அவர்கள் நீங்கள் நினைப்பதை விட அரிதானவர்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் சமூக ஊடக பயனர்களை உலுக்கியது. தலைமைத்துவம் அல்லது அதன் பற்றாக்குறை ஒருவரின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு ஆழமாகப் பாதிக்கும் என்பதற்கான "கடுமையான நினைவூட்டல்" என்று பயனர்களில் ஒருவர் இதை விவரித்தார்.
மற்றொரு பயனர் இதுபோன்ற சம்பவங்கள் மனதை உடைக்கும் வகையில் இருந்தாலும், இது அரிதான சமபவம் அல்ல. இப்படி பல சம்பவங்கள் நடக்கின்றன என்று சுட்டிக்காட்டினார். மேலும் செயல்திறன் அளவீடுகளை விட மக்களை மதிக்கும் பணியிடங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மரியாதைக்குரிய வேலை சூழலைத் தவிர வேறு எதற்கும் திருப்தி அடைய வேண்டாம் என்று ஒரு பயனர் மற்றவர்களை வலியுறுத்தினார். "நமக்கு நமது கனவு வேலையில் சேர்வது முக்கியம்தான், ஆனால், அங்கு நாம் மதிக்கப்படவும் வேணுடும்" என்று அவர் கூறினர்.
ஒரு பொறியாளர் எதிர்கொண்ட கடினமான சூழலை பற்றி பகிர்ந்து கொண்டு ஷ்ரவன் டிக்கூ மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்த பதிவு அந்த ஊழியரின் போராட்டத்தை விவரித்ததோடு மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்க்களை பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளது. 'ஒரு சிறிய பச்சாதாபம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வேலைக்கு மட்டுமல்ல, வேலை செய்பவர்களுக்கும் நல்ல மேலாளர்கள் தேவை' என்பதை இந்த பதிவு கோடிட்டுக்காட்டியுள்ளது.
மேலும் படிக்க | 130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?
மேலும் படிக்க | Elon Musk முகத்தில் குத்தியது யார்? காயத்தின் காரணம் இவர்தான்: வைரல் ஆகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









