4 வயது இரட்டை சகோதர-சகோதரிக்கு திருமணம்! பெற்றோர் செய்த செயல்..என்னங்க நடக்குது?

4 Year Old Twins Marry Each Other : சமீபத்தில், ஒரு பெற்றோர் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 7, 2025, 12:11 PM IST
  • 4 வயது சகோதர-சகோதர குழந்தைகள்
  • இரட்டை குழந்தைகளுக்கு இடையே திருமணம்!
  • தாய்லாந்தில் வினோதம்
4 வயது இரட்டை சகோதர-சகோதரிக்கு திருமணம்! பெற்றோர் செய்த செயல்..என்னங்க நடக்குது?

4 Year Old Twins Marry Each Other : கடந்த சில நாட்களாகவே உலகைச் சுற்றி நம்முடையாத அளவிற்கு வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை படிக்கும் போது, உலகம் எங்கே தான் செல்கிறது என்ற கேள்வியை நமக்குள் தோன்றுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது தாய்லாந்தில் நடைபெற்றிருக்கிறது. சகோதர-சகோதரி உறவு என்பது, நம் ஊரில் பாசமலர் படம் போல உன்னதமான உறவாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் இதே உறவை, திருமண உறவாக மாற்றி இருக்கின்றனர் தாய்லாந்து பெற்றோர்கள். 

Add Zee News as a Preferred Source

இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே திருமணம்! 

தாய்லாந்தை சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில், தங்களது நான்கு வயது இரட்டை குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர். இந்த திருமணமானது தாய்லாந்தில் இருக்கும் கலாசின் என்ற இடத்தில்  நடந்திருக்கிறது.  சகோதர-சகோதரியான இந்த இரட்டை குழந்தைகளின் பெயர், Thatsanaporn மற்றும் Thatsathorn என்பவை ஆகும்.

நான்கு வயது நிரம்பிய இந்த குழந்தைகளின் திருமணம் ஆனது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. இதன் வீடியோவும், இணையத்தில் வைரலாக வந்தது. இதைப் பார்த்து நெடிஷன்கள் தங்களுக்கு வாய்க்கு வந்ததை கமெண்ட் எடுத்து வருகின்றனர். 

வீடியோவில் இருந்த விஷயம்..

வைரலான வீடியோவில், அந்த திருமணத்திற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தில் கலந்துகொண்ட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பெற்றிருந்தன. இதில் அந்த நான்கு வயது மணப்பெண், தனது இரட்டை சகோதரரும் மாப்பிள்ளையுமான இன்னொரு நான்கு வயது சிறுவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. 

அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் நடந்து, சடங்குகள் தொடர்கிறது. திருமணம் முடிந்த பிறகு புத்த மத துறவிகள் அந்த இரு குழந்தைகளையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். பிற தரவுகளை வைத்து பார்க்கும்போது, இந்த திருமணம் ஜூன் 28ஆம் தேதி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீர்வரிசை! 

ஒரு சில செய்திகளில் இந்த திருமணத்தில் என்னென்ன சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பது குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. அதில் அந்த குடும்பம் நான்கு மில்லியன் தாய் பாட் பணம், தங்கம் சொல்லிட்டதை இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த பலர் ஷாக் ரியாக்சன் கொடுத்து இருக்கின்றனர். ஒரு சில பேர் தாய்லாந்தின் இந்த கலாச்சார முறையை விமர்சிக்க கூடாது என்று கூற, ஒரு சிலர் இதன் மீது கடும் தாக்குதலில் பொழிந்து வருகின்றனர். 

சொல்லப்போனால் இது தாய்லாந்து நாட்டில் அடிக்கடி நடக்கும் விஷயம் என்று கூறப்படுகிறது. அந்த நாட்டில் இருட்டை சகோதரர்களாக பிறக்கும் இரு பாலினத்தை சேர்ந்தவர்கள் முந்தைய ஜென்மத்தில் காதலர்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் தான் இரட்டை சகோதரர்களாக இந்த ஜென்மத்தில் பிறந்திருக்கின்றனர் என்று அந்த நாட்டு மக்கள் சிலர் நினைப்பதால் இதுபோன்ற திருமணம்தான் நடக்கிறது. இந்த ஜென்மத்தில், அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையையும், நோய் வாய்ப்பாடுவதையும், விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இந்த திருமணம் நடக்கிறதாம். 

வழிவழியாக நடக்கும் திருமணம்! 

இந்த திருமணமானது பல்வேறு தலைமுறைகளாக நடந்து வருகிறதாம். இது ஆயுளை நீட்டிக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த திருமணம் சட்டரீதியானது இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி இரட்டை சகோதர சகோதரிகளாக இருப்பவர்களின் திருமணம் அவர்களுக்கு 10 வயது ஆகும் முன்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 25 வயது இளம்பெண்ணின் வினோத திருமணம்... 2 பொம்மைகளுடன் உறவு, 10 குழந்தைகள்!

மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்! வினோத செய்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News