UP Woman Files Police Compliant : உத்திரபிரதேச மாநிலத்தில், நாளுக்கு நாள் தொடரும் வினோதமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மகள் திருமணம் செய்ய இருந்த நபருடன் தாய் ஓட்டம் பிடிப்பது, காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொன்று டிரம்மில் மறைப்பது என்று நாளுக்கு நாள் இந்த இடத்தில் நடக்கும் விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.
இன்ஸ்ட்டாவில் குறைந்த ஃபாலோவர்ஸ்:
உத்திர பிரதேச மாநிலம் ஹபுர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோவர்ஸ் குறைந்ததாக கூறி தனது கணவனை விட்டு பிரிந்திருக்கிறார். நிஷா, நொய்டாவை சேர்ந்த விஜயேந்திரா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ரீல்ஸ் எடுத்து அதனை instagram தளத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். இதைக் கவனித்த அவரது கணவர் விஜேந்திரா, எப்போதும் செல்போனை பார்க்காதே என்றும் வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவர் செல்போனை விட்டு தள்ளி இருக்க சொல்லி கூறியதால், நிஷா செல்போன் பயன்பாட்டை குறைத்து இருக்கிறார். வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். இதை எடுத்து ஒரு முறை instagram கணக்கை பார்க்க போது தனக்கு இரண்டு பின் தொடர்பாளர்கள் குறைந்திருப்பதை கவனித்திருக்கிறார். இதை எடுத்து கடும் கோபம் கொண்ட அவர் கணவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
கணவன் மீது புகார் கொடுத்த மனைவி..
கணவருடன் சண்டை போட்டுவிட்டு துணிமணிகளை எடுத்துக்கொண்டு, பில்குவாவில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் நிஷா. அதன் பிறகு கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதில் தனது கணவரின் வற்புறுத்தலின் பேரில் வீட்டை பெருக்குவது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது உன்கிட்ட பல்வேறு வீட்டு வேலைகளில் தான் ஈடுபட்டதாகவும், இதனால் தன்னால் ரிங்ஸ் பதிவேற்ற முடியாமல் போனதாகவும் கூறி இருக்கிறார். நாள் ஒன்றுக்கு இரண்டு ரீல்கள் பதிவிட்டு வந்த நிலையில், கணவரின் பேச்சைக் கேட்டு செல்போனை விட்டு தள்ளி இருந்ததால் தனக்கு தற்போது ஃபாலோவர்ஸ் குறைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
கணவர் முன்வைத்த குற்றச்சாட்டு..
இந்த வழக்கில் மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் விஜேந்திரிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது அவர் தனது மனைவி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். நிஷா என்னிடமும் இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கி இருப்பதாகவும், வீட்டு வேலைகளை அவர் சரியாக கண்டு கொள்வதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சனையில் இவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். அப்போது இல்லற வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், திருமண வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்றும் அட்வைஸ் செய்து இருக்கின்றனர். இதைக் கேட்டு இவர்கள் இருவரும் சண்டையில் இருவர் மீதும் இருந்த தவறை ஏற்றுக்கொண்டு அமைதியாக சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வார்களா இல்லையா என்பது குறித்த எந்த முடிவும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
மேலும் படிக்க | திருமணமான 15 நாட்களில் கணவரை கொன்ற மனைவி! மேகாலயா கொலை பாேல் இன்னொரு கேஸ்
மேலும் படிக்க | விமான விபத்துக்கு முன் ரீல்ஸ் செய்த விமான பணிப்பெண்கள்! வைரலாகும் கடைசி வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ