சீண்டிய சிறுவனை சும்மா விடுமா குரங்கு? வேற லெவல் வைரல் வீடியோ

Monkey Attack Video: தன்னை வைத்து வம்பு செய்த சிறுவனுக்கு சரியான பாடம் கற்பித்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2023, 08:29 AM IST
  • விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
  • குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.
சீண்டிய சிறுவனை சும்மா விடுமா குரங்கு? வேற லெவல் வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகளில் எத்தனை விஷமத்தனம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பெரும்பாலும் தங்களை யாராவது தொந்தரவு செய்தால் மட்டுமே அவை அவர்களை படுத்துகின்றன. குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. 

சிலர் குரங்குகளை தேவை இல்லாமல் சீண்டினால், அவை வெகுண்டு அவர்களை தாக்குகின்றன. மனிதர்களிடம் குரங்குகள் மிகவும் பாசமாக நடந்துகொள்ளும் பல வீடியோக்களையும் நாம் அவ்வப்போது இணையத்தில் பார்த்துள்ளோம். தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில், ஒரு குரங்கை சீண்டி அதற்கான பதிலடியை வாங்கிக்கொள்ளும் ஒரு சிறுவனை காண முடிகின்றது. 

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் குரங்கை தொந்தரவு செய்வதை காண முடிகின்றது. பிறகென்ன? குரங்கும் எத்தனை நேரம்தான் பொறுத்துக்கொள்ளும்? குரங்குக்கு கோபம் வந்தது. கோபமுற்ற குரங்கு செய்த வேலையை பார்த்தால், ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது. 

சிறுவன் செய்த சில்மிஷத்தை சிறிது நேரம் என்னவோ குரங்கு பொறுத்துக்கொண்டது. ஆனால், அதன் பிறகு குரங்கு சிறுவனுக்கு 'குங்ஃபூ' ஷாட் அடிப்பது போல் ஒரு உதை கொடுக்கிறது. இதைப் பார்த்த பிறகு நம்மால் சிரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால், இந்த சிறுவனுக்கு இது தேவையா என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. 

மேலும் படிக்க | தண்ணீரில் குதியாட்டம் போடும் யானைகள்! டாப்ஸ்லிப் வீடியோ வைரல்

குரங்கு கொடுத்த பதிலடி வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோ பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. இந்த வேடிக்கையான வீடியோ 'ursarcasm' என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான லைக்குகளும், பல கோடி வியூஸ்களும் கிடைத்துள்ளன. மேலும், இது ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கண்ணாடியை பார்த்து குழம்பிப் போன குரங்குகள்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News