)
Viral Video: இணையத்தில் தினம் தினம் பல வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் நமது மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. போர், பழிவாங்கும் நடவடிக்கைகள், பகை என உலகை பல தீய எண்ணங்கள் ஆக்கிரமித்திருந்தாலும், மனிதாபிமானமும், மனித நேயமும் இன்னும் பல இடங்களில் பரிமளித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரல் ஆகி வருகின்றது.
ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சருக்கு யாரென்றே தெரியாத ஒரு குடும்பம் மூலம் கிடைக்கும் அன்பு மற்றும் பாசத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதயங்களை உருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை இந்த வீடியோவில் காண முடிகின்றது. திடீரென வாசலில் வந்து நின்ற நபர்களுக்கு உணவளித்து பெங்களூரு தம்பதி செய்த செயல், அந்த நகரின் விருந்தோம்பல் பண்புக்கு அழகான சான்றாய் அமைகின்றது.
"உங்கள் வீட்டில் சாப்பிடலாமா?" விசித்திரமான தேடலை மேற்கொண்ட சதீவ் சிங்க்
சமூக ஊடகங்களில் இப்போது அலைகளை உருவாக்கி வரும் இந்த கிளிப், இன்ஃப்ளூயன்சரும் ஸ்டார்ட் அப் நிறுவனருமான சதீப் சிங் மேற்கொண்ட ஒரு விசித்திரமான தேடலை காட்டுகிறது. அவர் ஒரு நாள், அந்த பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் பாரம்பரிய, வீட்டில் சமைக்கப்பட்ட காலை உணவை உண்ணும் ஆசையுடன் கிளம்புகிறார். அவர் ஒரு சாலை வழியாக நடந்து செல்லும்போது, அங்குள்ள ஒரு வீட்டை நெருங்கி வாசலில் இருந்த பெண்ணிடம், "மேடம், நான் டெல்லியைச் சேர்ந்தவன், பாரம்பரிய உள்ளூர் காலை உணவை உட்கொள்ள விரும்புகிறேன். நான் உங்கள் வீட்டில் சாப்பிடலாமா?" என்று பணிவுடன் கேட்கிறார்.
மனதில் ஒட்டிக்கொள்ளும் காட்சி
எந்த தயக்கமும் இல்லாமல், அந்தப் பெண் தனது கணவரைக் குறிப்பிட்டு, "நான் அங்கிளிடம் கேட்கிறேன்" என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, வீட்டிலிருந்து அவரது கணவர் வருகிறார். சிங்கை அன்பான புன்னகையுடன் வரவேற்று, அவரை முழு மனதுடன் உள்ளே அழைக்கிறார். அதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பிரபலமான உணவு வகையான ராகி முட்டே அவருக்கு பரிமாறப்படுகின்றது. அந்த உணவும், அந்த குடும்பத்தில் எளிமையும், மற்றவர்களை வரவேற்று விருந்தளிக்கும் உயர் பண்பும் நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றது.
அந்த குடும்பம் உணவை மட்டும் பரிமாறவில்லை, ஊக்கத்தையும் வழங்கியது. அந்த குடும்பத் தலைவர், சதீவ் சிங்கிடன், தனது பணிகளில் கவனம் செலுத்தி தனது இலக்குகளில் வெற்றிபெறுமாறு அறிவுறுத்தினார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பி இருந்தது. புகைப்படங்களும், வாழ்த்துகளும் சேர்ந்த பிரியவைடையுடன் அந்த சந்திப்பு முடிந்தது. அந்த தருணத்தை நினைவுகூர்ந்த சிங், பின்னர், "பெங்களூரில் உள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள்" என்று தான் பகிர்ந்த பதிவில் எழுதினார்.
இந்த வீடியோ நெட்டிசன்களின் மனதை கவர்ந்தது. அவர்களில் பலர் இந்த சைகையை பெங்களூரு நகரத்தின் தன்மையின் உண்மையான பிரதிநிதித்துவமாகப் பாராட்டினர். "இதுதான் உண்மையான பெங்களூரு," என்று ஒருவர் எழுதினார். "இதை வெளியிட்டதற்கு நன்றி! சமூக ஊடகங்களில் இந்த நகரத்தைப் பற்றிய நகைச்சுவையான பல பதிவுகள் உள்ளன. ஆனால் பெங்களூருவின் இந்த உணர்வுப்பூர்வமான பக்கமும் மிக முக்கியம்" என மற்றொரு பயனர் கமெண்ட் செய்தார்.
மற்றொரு பயனர் உணர்ச்சிவசப்பட்டு, "இந்த வீடியோ எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் அவர்களைச் சந்தித்தது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும். தயவுசெய்து அவர்களை மீண்டும் சந்திக்க முயற்சிக்கவும். யாராவது தங்களை வந்து சந்திக்க மாட்டார்களா என்ற ஏக்கம் அவர்கள் முகத்தில் தெரிகிறது" என எழுதியுள்ளார்.
பலர் இந்த கருத்துக்கு தங்கள் இசைவை தெரிவித்தனர். "ஒருவேளை அவர்களின் சொந்த குழந்தைகள் வெகு தொலைவில் வசிக்கிறார்கள் போலும். அவர்கள் தங்கள் மகனை உங்களில் பார்த்திருக்கலாம். அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி," என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ