குழந்தைபோல் பாட்டிலில் பால் குடிக்கும் பூனைக்குட்டி! க்யூட் வீடியோ!

பிறந்த குழந்தையை போன்று பூனைக்குட்டி ஒன்று மெத்தையில் படுத்துக்கொண்டு பால் பாட்டிலில் பால் குடிக்கும் ஒரு க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 21, 2022, 08:13 AM IST
  • குழந்தையை போல் பால் குடிக்கும் பூனை.
  • மெத்தையில் படுத்துக்கொண்டு டப்பாவில் பால் குடிக்கிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
குழந்தைபோல் பாட்டிலில் பால் குடிக்கும் பூனைக்குட்டி! க்யூட் வீடியோ! title=

பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பால் பாட்டிலில் பாலை வைத்து கொடுப்பதை பார்த்திருப்போம், ஆரம்பகாலத்தில் குழந்தைகளுக்கு பால் பாட்டிலை எப்படி பிடித்து குடிக்க வேண்டும் என்று தெரியாது அப்போது அவர்களுக்கு தாய்மார்கள் ஊட்டுவார்கள்.  அதுவே கொஞ்சம் நாள் ஆக ஆக, குழந்தைகள் தாங்களே தங்களது கைகளால் பால் பாட்டிலை பிடித்துக்கொண்டு பாலை குடிப்பார்கள்.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் குழந்தையை போலவே இங்கு ஒரு பூனைக்குட்டி படுத்துக்கொண்டு பால் குடிக்கும் வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.  இதுபோன்று பூனை செய்யும் க்யூட்டான செயலை பார்க்கையில் ரசிக்கும்படியானதாக இருக்கின்றது.

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சில விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ அல்லது புதிதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் அதற்கான நீராகாரத்தை வழங்குவதை நாம் பார்த்திருப்போம் ஆனால் பூனைக்குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை, அந்த காட்சியை நாம் பார்த்து ரசிக்கும் வகையில் இணையத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வைரல் வீடியோவில் செம்பழுப்பு மற்றும் வெண்மை நிறம் கலந்த பூனைக்குட்டி ஒன்று மெத்தையின் மீது படுத்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  அந்த பூனைக்குட்டி படுத்துக்கொண்டு கையில் பால் பாட்டிலை வைய்த்துக்கொண்டு குழந்தையை போன்று குடித்துக்கொண்டு இருக்கின்றது.

 

பூனைக்குட்டியின் இந்த வீடியோவானது ஏராளமான இணையவாசிகளை கவர்ந்து இருக்கிறது, இணையத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News