நாகப்பாம்பை பிடிக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த சோகம்; Watch
.சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் (Viral Video) பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
ALSO READ: Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.
அதன்படி இந்த வீடியோ ஹாவேரி மாவட்டம் ஷிகாவி தாலுகாவில் உள்ள லேட் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நாகப்பாம்பு ஒன்று செங்கல் சூளையில் பதுங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. இதை கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பின்புறம் பதுங்கியிருந்த நாகப்பாம்பை ராஜு கவுரி என்பவர் பிடிக்க முயர்ச்சித்தார். அப்போது அந்த நாகப்பாம்பு ராஜு கவுரியை தாக்கியது. பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட ராஜூ கவுரியை ஹூப்ளியில் உள்ள கெப்பி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். தற்போது ராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜு பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பத்தை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ: கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR