Israel Iran Conflict: இஸ்ரேல் ஈரான் இடையிலான பதற்றங்களும் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் ஈரானியர்கள், நாட்டில் உள்ள தங்கள் சொந்தங்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, ஒரு விசித்திரமான ரோபோ குரல் அவர்களிடம் பேசுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
ஆழ்ந்த, அச்சுறுத்தும் குரல்.....
அசோசியேட்டட் பிரஸ் இந்த பதிவுகளைக் கேட்டு, அவற்றை "ஆழ்ந்த, அச்சுறுத்தும் வகையில் உள்ள, குழப்பமான" குரல்கள் என்று விவரித்தது. போன் காலில் பேசும் ரோபோ குரல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சில நிபுணர்கள் ஈரான் சர்வதேச அழைப்புகளைத் திசைதிருப்புவதாக கூறுகின்றனர். மற்றவர்கள் இஸ்ரேலும் இதற்குப் பொறுப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
தவறான ஆங்கிலத்தில் பேசும் AI குரல்
யுனைடெட் கிங்டமில் வசிக்கும் பிரிட்டிஷ்-ஈரானியரான எல்லி, தெஹ்ரானில் உள்ள தனது தாயாரை அழைத்தபோது, "ஆலோ? ஆலோ? யார் அழைக்கிறீர்கள்?" என்ற பதிலைப் பெற்றார். சில வினாடிகளுக்குப் பிறகு, அந்தக் குரல், "என்னால் நீ பேசுவதை கேட்க முடியவில்லை" என்று கூறியது. பின்னர் அது, "யாருடன் பேச விரும்புகிறீர்கள்? நான் அலிசியா. என்னை நினைவிருக்கிறதா? நீ யார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியது. அந்த குரல் தவறான ஆங்கிலத்தில் பேசுவதாகவும் கூறப்படுகின்றது.
மற்ற நாடுகளில் உள்ள குறைந்தது ஒன்பது ஈரானியர்கள், இந்த பயங்கரமான குரல் பதிவுகள் பற்றி தங்களிடம் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பற்றி கண்டறிய, AP நிறுவனம் ஐந்து நிபுணர்களுடன் குரல் கிளிப்புகளைப் பகிர்ந்து கொண்டது. அவர்கள் அது, குறைந்த தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு, ஒரு சாட்பாட் அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க முன்பே பதிவு செய்யப்பட்ட செய்தி, என இவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர், அழைப்பில் உள்ள பயங்கரமான குரலுக்குப் பின்னால் ஈரானிய அரசாங்கம் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அது இஸ்ரேல் வேலையாகவும் இருக்கலாம் என்று நம்புகிறார்.
இஸ்ரேலும் ஈரானும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு பதற்றமான சூழலில் உலகை நிறுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் "நாட்டைப் பாதுகாக்கும் முயற்சி" என்ற பெயரில் பரவலான இணைய முடக்கத்தை விதித்துள்ளதால், மற்ற நாடுகளில் உள்ள ஈரானியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது சாத்தியமற்றதாகிவிட்டது.
அம்மாவுக்கு போன் செய்தால், பேசியது AI
AP நிறுவனத்திடம் பேசிய ஈரானியர்களின் உறவினர்கள் சிலர் ரோபோ குரல்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் தனது தாயாரை அழைத்தபோது அந்த குரலைக் கேட்டுள்ளார். இதை கேட்டு அவர் வெகுவாக பயந்துள்ளார். இதை ஒரு வகையான "உளவியல் போர்" என்று அவர் நினைக்கிறார். அம்மாவை போனில் அழைக்கும்போது ஒரு AI குரல் கேட்பது "நான் அனுபவித்ததிலேயே மிகவும் பயங்கரமான விஷயங்களில் ஒன்றாகும். அதை என் உடலில் உணர முடிகிறது" என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.
போனில் கிடைத்த வாழ்க்கை பாடம்
மற்றொருவருக்கு மற்றொரு வகையான அனுபவம் கிடைத்தது. தனது உறவினரை அழைத்த அந்த நபருக்கு போனில் வாழ்க்கை பாடம் கிடைத்தது. "நான் பேசுவதை கேட்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. இன்று, உங்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நம் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கக்கூடிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். வாழ்க்கை எதிர்பாராத ஆச்சரியங்களால் நிறைந்துள்ளது. இந்த ஆச்சரியங்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைத் தரும், மற்ற நேரங்களில் அவை நமக்கு சவால் விடுகின்றன." என அந்த குரல் உபதேசித்துள்ளது.
இதற்கிடையில், போன் செய்து எந்த பதிலும் கிடைக்காதவர்களும் உள்ளனர். போன் ரிங் போய்க்கொண்டே இருக்க, யாரும் அதை எடுப்பதில்லை. அழைப்புகள் முடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அழைப்புகள் டீஃபால்ட் செய்தி அமைப்புக்கு திருப்பிவிடப்படலாம் என்று ட்விட்டரின் உலகளாவிய கொள்கையின் முன்னாள் துணைத் தலைவரான கோலின் குரோவெல் கூறியதாக AP மேற்கோள் காட்டியது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஈரானிய சைபர் பாதுகாப்பு நிபுணர் அமீர் ரஷிதி, ஈரானிய அரசாங்கம் ஹேக்கர்களைத் தடுக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது என்றார்.
மொத்தத்தில் இஸ்ரேல் ஈரான் போர் இரு நாட்டிலும் பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. ஆனால், மிகப்பெரிய சேதமும், நஷ்டமும் இரு நாட்டு மக்களுக்கே அதிகம். இதுமட்டுமல்லாமல் நாட்டை விட்டு வெளியே, உறவினர்களிடமிருந்து தூரமாக இருக்கும் நபர்களும் பதற்றத்தின் உச்சியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தற்போது போனில் கேட்கும் இந்த வினோத குரல் பற்றிய செய்தி இணையத்திலும் வேகமாக பரவி பல வித ஊகங்களை கிளப்பி வருகிறது.
மேலும் படிக்க | மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்! பகீர் காரணம்..என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ