பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ..

Cute Funny Viral Video Of Cat : ஒரு பூனையை, குழந்தையாகவே நினைத்து ஒரு குடும்பம் தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 14, 2024, 06:46 PM IST
  • பூனையை தொட்டிலில் போட்ட குடும்பம்
  • பேந்த பேந்த விழிக்கும் பூனை
  • வைரலாகும் க்யூட் வீடியோ..
பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ.. title=

Cute Funny Viral Video Of Cat : சமூக வலைதளங்கள், நம்மை வளர்க்கின்றதோ, இல்லையோ நன்றாக நம் நேரத்தை போக்க உதவுகிறது. இந்த வீடியோக்களில் சில நம்மை பயமுறுத்தும் வகையிலும், சில சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். சினிமா, உலக நிகழ்வுகள், நடிகர்களின் நேர்காணல்கள், செய்திகள், திரைப்படங்களின் க்ளிப்பிங்க்ஸ், மீம்ஸ் என என்னற்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தளத்தில் காணலாம். இவற்றில் சில, நம்மை எரிச்சல் படுத்தும் வகையில் இருக்கும். இன்னும் சில, அது 30 விநாடிகளாக இருந்தாலும் 30 நிமிடங்கள் பார்க்க வைக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோதான், தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

வைரல் வீடியோ: 

பொதுவாக, இந்திய இல்லங்களில், அம்மாவின் சேலையை தொட்டிலாக கட்டி பிறந்த குழந்தையை அதில் போட்டு ஆட்டி தூங்க வைப்போம். அந்த குழந்தைக்கு அக்காவோ அண்ணனோ இருந்தால் அந்த குழந்தையும் அதில் சேர்ந்து ஆடும். ஆனால் யாராவது பூனைக்கு அவ்வாறு தொட்டில் கட்டி தாலாட்டுவார்களா? இங்கு ஒரு க்யூட் குடும்பம் அதை செய்கிறது. 

புசுபுசுவென இருக்கும் ஒரு பூனையை கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறார் பெண் ஒருவர். அருகில் லுங்கி கட்டிக்கொண்டு நிற்கும் ஒருவர் புடவையை வைத்து தொட்டில் கட்டி முடிக்கிறார். பூனையை குழந்தை பாேல கொஞ்சிக்கொண்டிருந்த அந்த பெண், தொட்டிலில் பூனையை போட்டு அதை குழந்தை போல கொஞ்சுகிறார். அந்த பூனையோ, “யார்ரா நீங்கள்ளாம்..? என்னடா பண்றீங்க?” என்பது பாேல விழித்து விழித்து பார்க்கிறது. 

இந்த வீடியாேவில், பிரபல நடிகை கிருத்தி ஷெட்டி “Cute” என்று கமெண்ட் செய்திருக்கிறார். பல மில்லியன் வியூஸ்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த வீடியோவை பலர் பார்வையிட்டு, லைக்ஸ்களை அள்ளித்தெரித்து ரீ-ஷேர் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..

மேலும் படிக்க | சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்தத பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News