வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் மனதைக் கவரும் சில வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இப்படிப்பட்ட சில வீடியோக்கள் நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் நீங்காமல் நிற்கின்றன. பயனர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து தங்கள் சோர்வை நீக்கிக் கொள்கிறார்கள். சமீபத்தில், இதேபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இது இணையவாசிகளின் நெஞ்சங்களை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது என்றே கூறலாம். அதில் ஒரு கால்நடை மருத்துவர் பயத்தில் இருக்கும் நாய்க்கு சிகிச்சையளித்து அதை ஆசையாக அரவணைத்து பாசம் காட்டி தைரியம் அளிப்பதை காண முடிகின்றது. இதைப் பார்த்து சில பயனர்களின் கண்கள் ஈரமாகிவிட்டன.


மேலும் படிக்க | குழாயில் மறைந்திருந்த நாகப்பாம்பு, பதற வைக்கும் வைரல் வீடியோ


கால்நடை மருத்துவர்கள் பொதுவாக மிகவும் கொடூரமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளை இரக்கமின்றி நடத்துவதாக பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்த சிந்தனைக்கு முற்றிலும் மாறாக, தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில் காணப்படும் கால்நடை மருத்துவர் அனைவரின் மனதையும் வென்றுள்ளார். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் ஒரு நாயின் அருகில் சென்று அவர் அமர்வதை வீடியோவில் காண முடிகின்றது. அதன் பின்னர் அந்த கால்நடை மருத்துவர் அந்த நாயை நேசிப்பதையும் அதன் பயத்தை நீக்குவதையும் காண்கிறோம். 


நாயை தட்டிக்கொடுத்து தைரியம் சொல்லும் மருத்துவர்


இந்த வைரலான வீடியோவை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பல தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் கால்நடை மருத்துவரின் பணியை பாராட்டி வருகின்றனர். இது @_B___S என்ற பெயரில் ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த வீடியோவில் கால்நடை மருத்துவர் நடுங்கும் நாயிடம் சென்று அதை பாசமாக அணைத்துக்கொண்டு, வசதியாக உணரவைத்து அதன் பயத்தை போக்க உணவு வழங்குகிறார். அதன் பிறகு மருத்துவர் அந்த நாயின் முதுகில் மெதுவாக தட்டத் தொடங்குகிறார்.


வீடியோ 15 மில்லியன் வியூஸ்களைப் பெற்று வைரல் ஆனது


இந்த வீடியோ பயனர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள நிலையில், மருத்துவர் நாயைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதை வீடியோவில் காணலாம். அதன் பிறகு அவர் நாயை தன் மடியில் உட்கார வைக்கிறார். இந்த வீடியோ பயனர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி எழுதும் நேரம் வரை, சமூக வலைதளங்களில் 15 மில்லியன், அதாவது ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேலான வியூஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இது ஒரு மிகவும் அழகான மற்றும் நிதானமான தருணம்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நாய் பண்ண வேலைய பாருங்க.. நமக்கெல்லாம் ஒரு பாடம்: சல்யூட் அடிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ