வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன. 


இணையத்தில் பகிரப்பட்ட நாயின் வீடியோ


சமீபத்தில் நாயின் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. இதில் காண்பது போன்ற காட்சியை நாம் பொதுவாக வெறு எங்கும் பார்த்திருக்க முடியாது.


குப்பை சேகரிப்பவருக்கு உதவும் நாய்


இந்த வீடியோவில் நாய் ஒன்று சாலையில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு உதவி செய்வதை காண முடிகின்றது. குப்பைகள் நிறைந்த பையை ஒரு பெண் தூக்கிச்செல்வதை காண முடிகின்றது. அவருடன் குப்பைகள் இருக்கும் மற்றொரு பையை நாய் ஒன்று இழுத்துச்செல்கிறது. இந்த வகையில் நாய் அந்த பெண்ணுக்கு பெரும் உதவியை செய்கிறது. இந்த வீடியோ இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.


மேலும் படிக்க | அட்ரா சக்க.. என்னமா நீச்சல் அடிக்குது இந்த குரங்கு: வைரல் வீடியோ


மனதுக்கு இதமளித்த நாய்


வைரலாகி வரும் வீடியோவில், பயனற்ற பொருட்கள் இருப்பதாகக் கூறப்படும் ஒரு பெரிய பையை ஒரு பெண் எடுத்துச் செல்வதைக் காண்கிறோம். அவரது செல்ல நாய் அவரைப் பின்தொடர்ந்து வருவதையும், அதுவும் அதேபோன்ற ஒரு பையை இழுத்துச் செல்வதையும் பார்க்க முடிகின்றது. அந்த பெண்ணுக்கு உதவி செய்ய நாய் எடுக்கும் முயற்சியும், அதில் அது காட்டும் அர்ப்பணிப்பும்.... இதை காண்பவர்களின் மனதுக்கு இதமாக இருந்தது.


மனதை கொள்ளைகொள்ளும் வீடியோவை இங்கே காணலாம்: 



வீடியோவின் தலைப்பில், "நாய்கள் நமது சிறந்த நண்பர்கள்!" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் The Figen என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒரு பயனர்,  "நாய்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்ற கூற்று உண்மைதான் என்பது இப்போது புரிகிறது’ என எழுதியுள்ளார். ‘அந்த நாய் மனதை இளக வைத்துவிட்டது’ என மற்ற்ரு நபர் கமெண்ட் செய்துள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | வாய்க்காலில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு, திக் திக் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ