பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் (DD) மற்றும் அகில இந்திய வானொலி (AIR) ஆகியவற்றின் டிஜிட்டல் சேனல்கள் 2020 ஆம் ஆண்டில் 100 சதவீதத்திற்கும் அதிகமான டிஜிட்டல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவை 2020 ஆம் ஆண்டு முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் ஆறு பில்லியனுக்கும் அதிகமான பார்வை நிமிடங்களையும் (Watch Minutes) பெற்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், DD மற்றும் AIR ஆகியவை 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரபலமடைந்துள்ளன.


2020 ஆம் ஆண்டில், DD மற்றும் AIR-க்கு, இந்தியாவுக்குப் பிறகு, அதிகபட்ச டிஜிட்டல் பார்வையாளர்கள் பாகிஸ்தானில் (Pakistan) இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அதிக மக்கள் இவை இரண்டையும் பார்த்து, கேட்டுள்ளனர்.


தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் அதிகாரப்பூர்வ பிரசார் பாரதி செயலியான NewsOnAir செயலியில் இணைந்தனர்.



ALSO READ: வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா? சத்குரு கூறுவது என்ன..!!


DD National மற்றும் DD News தவிர, டிடி சஹாயத்ரியின் மராத்தி செய்திகள், டிடி சாந்த்னாவில் கன்னட நிகழ்ச்சிகள், டிடி பங்களாவின் பங்களா சமச்சார் மற்றும் டிடி சப்தகிரியில் தெலுங்கு நிகழ்ச்சிகள் ஆகியவை பிரசர் பாரதியின் முதல் 10 டிஜிட்டல் சேனல்களில் அடங்கும்.


பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பள்ளி குழந்தைகளுடனான உரையாடல் 2020 ஆம் ஆண்டில் டிடியின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் வீடியோவாக இருந்தது. இது தவிர, குடியரசு தின அணிவகுப்பு 2020, டிடி தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் கணித மேதை சகுந்தலா தேவியின் அரிய வீடியோ ஆகியவை இவ்வாண்டில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் வீடியோக்களில் அங்கம் வகித்தன.


பிரமருடைய ‘மன் கி பாத்’ யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கம் 2020 ஆம் ஆண்டில் மிக அதிக வளர்ச்சியைக் கண்டன. மன் கி பாத் அபேட் ட்விட்டர் பக்கத்தில் 67,000 க்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 1,500 வானொலி நாடகங்கள் DD-AIR நெட்வொர்க்கில் கிடைக்கின்றன. அவை இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு யூடியூப் சேனல்களில் (YouTube Channel) பதிவேற்றப்படுகின்றன.


ALSO READ: Shocking: உலகின் முதல் AIDS நோயாளி யார் தெரியுமா? வியக்க வைக்கும் விவரங்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR