)
Viral Video Bride Punches Groom's Friend : சமீப காலங்களாக, திருமண நிகழ்ச்சிகளில், திருமண மேடையிலேயே சண்டை வருவது என்பது வாடிக்கையாகி வருகிறது. பொதுவாக, திருமணம் நடக்கும் நேரத்தில் பெண் வீட்டார்-மாப்பிள்ளை வீட்டாருக்கு இடையில்தான் சண்டை வரும். ஒரு சில சமயங்களில், இந்த சண்டை அடிதடி வரை கூட போகலாம். ஆனால், மணமேடையில் அப்படிப்பட்ட சண்டைகள் வருவது கொஞ்சம் அரிதுதான். அப்படி, திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு கலாட்டாதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தவர்கள், விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ:
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகனும் மணப்பெண்ணும் மாலை மாத்திக்கொள்ளும் காட்சிகள் இதில் பதிவாகி இருக்கிறது. வட இந்தியாவின் பல்வேறு இடங்களில், திருமணம் நடக்கும் போது அவர்களுக்கென்று நடைபெறும் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும். நம் ஊரிலேயே கூட, திருமணம் செய்து கொண்ட பின்பு, மாலை மாற்றிக்கொள்வது வழக்கம். அப்படித்தான் இந்த ஜோடியும் செய்கின்றனர்.
மணமேடையில், மணமகள் தனது தோழியுடன் நின்று கொண்டிருக்க, அவருக்கு எதிரில் மணமகன் தனது தோழனுடன் நிற்கிறார். அப்போது இவர்கள் மாலை மாற்றிக்கொள்ளும் போதுதான் இந்த சம்பவமானது நடந்திருக்கிறது.
குனிய வைத்து குத்திய பெண்:
திருமணத்திற்கு பின்பு, மாலை மாற்றிக்கொள்ளும் தருணத்தில் அந்த மாலையை போட விடாமல் தடுக்க, அருகில் இருப்பவர்கள் சில சேட்டைகள் செய்வதுண்டு. அப்படி, அந்த மணப்பெண், மனமகனுக்கு மாலை போட வரும் போது, அருகில் இருந்து மணமகன் தோழன் அவரை தன் பக்கம் இழுத்தார். மீண்டும் அந்த பெண் மாலை போட முயற்சி செய்ய, அப்போதும் மாப்பிள்ளையின் கையை பிடித்து தோழன் இழுத்தார். இதனால், 2 முறையும் அந்த பெண்ணால் மாலை போட முடியாமல் போனது. மூன்றாவது முறையும் அவர் அதே பாேல செய்ய, அந்த பெண் டென்ஷனாகி விட்டார்.
அதிர்ச்சியில் உறவினர்கள்:
அந்த மனமகன் தோழன் இவ்வாறு செய்ய, மணபெண் தன் கையில் இருந்த மாலையை அருகில் இருந்த தோழியிடம் “இத கொஞ்சம் புடியேன்..” என்று குடுத்துவிட்டு, “இங்க வா டா..” என்று அழைத்தார். மணமகன் தோழனின் முடியை பிடித்து இழுத்து, அவரை குனிய வைத்து முதுகில் தனது கை முட்டியால் 3 குத்து குத்தினார்.
இதை பார்த்த அருகில் இருந்த தோழி, “அப்படித்தான் நல்லா போடு அவன..” என்பது போல தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அருகில் இருந்த உறவினர்கள் செம ஷாக் ஆகியிருக்கின்றனர். இதற்கு நெட்டிசன்கள் கொடுத்திருக்கும் கருத்துகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நெட்டிசன்களின் நகைச்சுவையான கருத்து:
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “மாப்பிள்ளை தனது வருங்காலத்தை ஒரு நிமிடம் கண்முன் பார்த்து விட்டார்” என்று கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர், இது முன்கூட்டியே பேசி வைத்த ஸ்கிர்ப்ட் செய்த வீடியோவாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இப்படி அவர்கள் பகிர்ந்துள்ள பல நகைச்சுவையான கமெண்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ