முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக MP-யுமான கௌதம் கம்பீர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயனமான அவரை கண்டுபிடித்து தருமாறு டெல்லி முழுவதும் சுவரொட்டிகள் காணப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் மாசு அதிகரிக்கும் செய்தி ஒருபுறம் மக்களை கலங்கடித்து வரும் அதே வேளையில், மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்க சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்காத பாஜக MP கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக, நவம்பர் 15, 2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். 


இந்நிலையில் தற்போது ITO பகுதியில், கம்பீர் காணாமல் போன சுவரொட்டிகள் அனைத்து இடங்களிலும் ஒட்டிக்கொண்டிருப்பதைக் நம்மாள் காண முடிகிறது. இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி கையாண்டுள்ள இந்த தனித்துவமான எதிர்ப்பு முறை மக்கள் மத்தியில் நிறைய விவாதங்களை சந்தித்துள்ளது.


தெருவெங்கும் காணப்படும் கம்பீரின் சுவரொட்டியில் அவரது படத்தின் கீழ்... "நீங்கள் இவரைப் பார்த்தீர்களா? கடைசியாக இந்தூரில் ஜலேபி மற்றும் போஹா சாப்பிடும்போது காணப்பட்டார். மாயமான இவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கேட்டுகொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.



கிடைத்த தகவல்களின்படி, 2019 நவம்பர் 15 கூட்டத்தில் கம்பீர் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னர், அவரைப் பற்றிய ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தில் அவர் சில நண்பர்களுடன் இந்தூரின் தெருக்களில் ஜலேபியை சாப்பிடுவதை நாம் காணலாம்.


இந்நிலையில் தற்போது கௌதம் கம்பீர் நடத்து முடிந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,  ஆம் ஆத்மி தொண்டர்கள் தட்டில் ஜலேபிகளை ஏந்தி டெல்லி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  மேலும், டெல்லியில் நடைப்பெற்ற மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் முக்கியமான கூட்டத்தை விட்டு MP கௌதம் கம்பீர் கிரிக்கெட் போட்டி குறித்தும், ஜலேபியை சாப்பிடுவது குறித்தும் கருத்துத் தெரிவித்து வருகிறார் எனவும் கடுமையாக சாடினர். 


டெல்லியில் மாசு அளவு மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள நிலையில், பாரதீய ஜனதாவுக்கு இது குறித்து எந்த வருத்தமும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.