Noida airport: சீன விமான நிலையம் இந்தியாவிலா? அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி!

என்ன? சீனா, தனது விமான நிலையத்தை இந்தியாவில் அமைத்துள்ளதா? என்ன கொடுமை சார் இது? என வடிவேலு பாணியில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 09:15 AM IST
  • சீன விமான நிலையம் இந்தியாவிலா?
  • அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி!
  • கலாய்க்கும் நெட்டிசன்கள்
Noida airport: சீன விமான நிலையம் இந்தியாவிலா? அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி! title=

புதுடெல்லி: நேற்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (NIA) அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாக பதியப்பட்டிருந்தன. அதில் மத்திய அரசு தரப்பில் பகிரப்பட்ட ஒரு டிவிட்டர் பதிவு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பிறகு அர கலாய்த்து நையாண்டிப் பதிவுகளை போடத்தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்க என்று ஒரு டிவிட்டர் பதிவர் நக்கலடிக்கிறார்

சரி அப்படி என்ன தான் அரசின் அதிகாரபூர்வ வலைதளம் போட்ட பதிவு அனைவரையும் திகைக்க வைத்தது? அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நொய்டா

@MyGovHindi என்ற மத்திய அரசின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்ட பதிவில் பெய்ஜிங் ஸ்டார்ஃபிஷ் விமான நிலையத்தின் புகைப்படங்கள் இருந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு, விமர்சனங்கள் எழுந்தன. எனவே, அந்த ட்வீட் நீக்கப்பட்டது.  

நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நொய்டா சர்வதேச விமான நிலையம் (Noida International Airport) இந்தியாவின் மிகப்பெரிய விமான பராமரிப்பு மையமாகவும்  இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், இந்த திட்டம் காரணமாக டெல்லி-NCR, மேற்கு உத்திர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். 

ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக இந்த விமான நிலையம் இருக்கும். 1,330 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம், 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் இந்த விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை விட பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தை ஏற்றுமதி மையமாக மாற்றும் இந்த புதிய விமான நிலையம், அரசியல் நோக்கத்திற்க கட்டப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். 

Also Read | நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News