கடலை மிட்டாய் ரொம்ப பிடிக்குமா? அப்போ உடனே இந்த வீடியோவ பாருங்க

Chikki Making Viral Video: நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? அப்படியானால் இந்த வீடியோவை கட்டாயம் ஒரு முறை பார்க்கவும். இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் தொழிற்சாலையில் கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 9, 2024, 10:27 PM IST
  • வைரலான வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
  • கடலை மிட்டாய் இவ்வளவு அழுக்காக செய்யப்படுகிறதா
கடலை மிட்டாய் ரொம்ப பிடிக்குமா? அப்போ உடனே இந்த வீடியோவ பாருங்க

இன்றைய வைரல் வீடியோ: Chikki Making Viral Video: நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? அப்படியானால் இந்த வீடியோவை கட்டாயம் ஒரு முறை பார்க்கவும். இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் தொழிற்சாலையில் கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் நபர் கடலை மிட்டாயை எப்படி தயாரிக்கிறார் என்பதை பார்த்தால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். கால்களைப் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் இந்த கடலை மிட்டாய் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலை:
கடலை மிட்டாய் செய்யும் இந்த வைரல் வீடியோவை (Viral Video In Tamil) லட்சுமிகுஞ்சி என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், வெறும் தரையில் பாகு வெல்லம் மற்றும் வறுத்த வேர்க்கடலையை ஒன்றாக கலப்பதை நாம் காணலாம். பாகு வெல்லம் மற்றும் வேர்க்கடலை பரப்பப்பட்ட இடத்தில், அங்கு வேலை செய்பவர் தனது காலால் இதை சமம் செய்ய அதில் நடப்பதைக் காணலாம். மேலும் மற்றொருவர் கலவையை வெறும் தரையில் பரப்பி ஒரு சப்பாத்தி செய்யும் ரோலில் பரப்பி பின்னர் வெட்டப்படுகிறது. இதற்குப் பிறகு, அவை தரையில் தனியாக வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Dance Video: இணையத்தை தெறிக்கவிட்ட கூல் நடனம்.... : மயங்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

தொழிற்சாலையில் கடலை மிட்டாய் தயாரிக்கப்படும் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:

வைரலான இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்:
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram Viral Video) வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு பல கமெண்ட்கள் வருகின்றன. இதனுடன், இதில் கடலை மிட்டாய் தயாரிக்கும் முறையைப் பார்த்து மக்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுகிறார்கள், மேலும் கடலை மிட்டாய் இவ்வளவு அழுக்காக செய்யப்படுகிறதா என்று ஆச்சரியப்பட்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீட்டிலேயே தரமான கடலை மிட்டாய் செய்து சாப்பிடலாம்:
எனவே இனி தரம் இல்லாத கடலை மிட்டாயை (Jaggery Chikki) வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இப்போது நாம் வீட்டிலேயே எவ்வாறு கடலை மிட்டாய் செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்
எள்ளு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் வேர்க்கடலை மற்றும் எள்ளை சுத்தம் செய்து கடாயில் போட்டு சரியான பதத்திற்கு வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் இப்போது, வெல்லத்தைப் போட்டு வெல்லப்பாகு தயார் செய்யவும். பாகு சரியான பதத்திற்கு வந்ததும் அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டவும். அடுத்து, கத்தியை வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஆற விடவும். இப்போது சுவையான கடலை மிட்டாய் தயார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | பேஸ்புக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா பிரமுகரின் மகன்! பீதி கிளப்பிய ஃபேஸ்புக் லைவ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News