)
HR Criticize Employee Linkedin Post : பிரபல நிறுவனம் ஒன்றின் HR வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றுதான், இப்போது இணையத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அந்த போஸ்டில் அவர் அப்படி என்ன கூறியிருக்கிறார்?
“காலை 10:00 மணிக்கு சம்பளம் கிரெடிட் ஆனது, 10:05 மணிக்கு ராஜினாமா மெயில் வருகிறது” என்பதுதான், அந்த பதிவின் ஹைலைட்டாக இருந்தது. அந்த HRதான், புதிதாக வேலைக்கு வந்தவருக்கு ட்ரெயினிங் கொடுத்து, அவரது வேலைகளை பார்த்துக்கொள்பவராக இருந்திருக்கிறார்.
அதில் மேலும் அந்த HR சில கேள்விகளை கேட்டிருக்கிறார். “தொழில் தர்மம் குறித்து பேசுவோம். இந்த நிறுவனம் உங்களை நன்றாக வரவேற்றது, உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள ஒரு பிளாட்ஃபார்மை கொடுத்தது. ஆனால், சம்பளம் வந்த 5 நிமிடத்தில் நீங்கள் வேலையை ராஜினாமா செய்கிறீர்கள். இது நியாயமா? இதுதான் நெறிமுறையா?” என்று கேட்டிருக்கிறார்.
மேலும், இப்படி கடைசி நேரத்தில் ராஜினாமா செய்வதை, பொறுப்புணர்வு இல்லாமை, மெச்சூரிட்டி இல்லாத தனம் என்று குறிப்பிட்டிருந்தார். இது போல் செய்வதற்கு பதிலாக, வெளிப்படையாக பேச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
“உங்களுக்கு ஏதேனும் தவறாக தோன்றியிருந்தால், அது குறித்து பேசியிருக்க வேண்டும். எங்களிடம் விளக்கம் அல்லது உதவி கேட்டிருக்கலாம். உங்களுக்கு வசதியான ஒரு முடிவை அல்லாமல், உணர்வுபூர்வமான ஒரு முடிவை எடுத்திருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வேலைகளிலும் சவால் இல்லாமல் இருக்காது என்று கூறிய அவர், ஒரு உண்மையான தொழில்முறை சார்ந்தவர்களுக்கு சம்பளத்தை தாண்டி வளர்ச்சி என்பது முக்கியமாக இருந்திருக்கும் என்கிறார். “எந்த வேலையும் எளிமையான வேலை கிடையாது. அனைத்து வேலைகளும் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் முயற்சி தேவைப்படுவதாய் இருக்கும். வளர்ச்சி, உங்களின் முதல் சம்பளத்தில் வந்து விடாது. அது விடாமுயற்சியால்தான் வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முடிவாக, அவர் தொழில்முறை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் அவர்களின் வேலை குறித்த முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். “கம்பெனி கல்ச்சர், பொருந்தாதா வேலைதான் பிரச்சனை என்று விரல்களை நீட்டும் முன்பு, நிறுத்துங்கள். சிந்தனை செய்யுங்கள், பேசி தீர்வு காணுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நெட்டிசன்களின் கருத்து:
மேற்கூறிய அந்த HRன் பதிவானது, ஆன்லைனில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஒருவர், ராஜினாமா செய்தவர் மீது தவறு இல்லை. நீங்கள் HRஆக இருந்து கொண்டு இது போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் போடுவது உங்களின் குழந்தைதனத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொருவர், வேலையை விட்டு விலகிய ஊழியருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். “ஒருவர் சம்பளம் வந்தவுடன் வேலையை ராஜினாமா செய்கிறார் என்றால், அவர் அவரது அந்த மாதத்திற்கான வேலையை சரியாக செய்துள்ளார் என்று அர்த்தம். அவர்கள் நோட்டிஸ் மாதத்தில் வேலை செய்வார்கள் என்பதை மறவாதீர்கள். எனவே, நிறுவனத்திற்கு இது ஒன்றும் ஷாக் தரக்கூடிய விஷயம் அல்ல. நிறுவனங்களுக்கு நியாயமான ஒருவர் தேவை என்றால், அவர்கள் கல்யாண சர்டிஃபிகிட்டைதான் கொடுக்க வேண்டும், ஆஃபர் லெட்டரை அல்ல” என்று கிழித்தெடுத்து இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ