Ice dance: வெண்பனி மலையில் இந்திய ராணுவத்தினரின் டான்ஸ்! வீடியோ வைரல்
உறைபனியில் நடனமாட முடியுமா? முடியும் என்பதை நிரூபிக்கும் ராணுவத்தினரின் குதூகல குகுரி நடனம்! வீடியோ வைரலாகிறது.
புதுடெல்லி: இந்திய ஆயுதப்படை வீரர்களிடம் அபாரமான போர்த்திறன்கள் மட்டுமல்ல, நடனத் திறமையும் ஒளிந்து கிடக்கிறது என்று கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
உறைந்து போகும் பனியில் ராணுவத்தினர் நடனமாடுவதை பார்த்தால் பரவசமாக இருக்கிறது. இது ராணுவத்தினரின் குதூகல குகுரி நடனம் என்பதால் வீடியோ வைரலாகிறது.
ராணுவத்தினரின் வலிமையும் தைரியமும் அனைவரும் அறிந்திருந்தாலும், நடனத்திலும் (Dance Video) அவர்கள் சக்கை போடு போடுவார்கள் என்று இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் பாராட்டுகின்றனர்.
அதிலும் பனிப்பொழிந்துக் கொண்டிருக்கும்போது, எப்படி இப்படி குதூகலமாக நடனமாக முடியும் என்ற வியப்பும் ஏற்படுகிறது. அதிலும் குகுரி வகை நடனத்தின் அசைவுகளை அருமையாக பின்பற்றி ஆடும் இந்த நடனம் பலராலும் ரசிக்கப்படுகிறது.
குக்குரி என்பது வெற்றியைக் குறிக்கும் ஒரு சிறிய கத்தி, குக்குரி நடனம் தைரியத்தை மட்டுமல்ல, வீரத்தையும் தருகிறது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டாரில் பனி படர்ந்த மலைத்தொடர்களில் இந்திய ராணுவ வீரர்கள் 'குகுரி நடனம்' (Viral Video) ஆடினர்.
தங்கள் பொறுப்பு மற்றும் தீரமான செயல்பாடுகளால் நாட்டு மக்களால் நேசிக்கப்படும் இந்திய வீரர்களின் இந்த நடன வீடியோ அவர்களின் நடனத் திறமையை மட்டுமா காட்டுகிறது?
மூச்சுக்காற்றுக்கே தட்டுப்பாடாக இருந்தாலும், பனியின் தாக்கத்தால் உறைந்துபோனாலும், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய பணிச்சுமைக்கு நடுவிலும், வாழ்க்கையை சுமையாக அல்ல, சுகமாக எடுத்துக் கொள்ளும் உறுதி படைத்த மனதை கொண்டவர்களே வீரர்கள் என்ற தாரக மந்திரத்தையும் அல்லவா கற்றுக் கொடுக்கிறது இந்த வீடியோ?
பனியிலும் பணியாற்றும் ராணுவத்தினர் என்று பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படும் இந்த வீடியோ, லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டு விரும்பப்பட்டுள்ளது.
ALSO READ | குத்தாட்டம் போட்ட மணமகன், வேற லெவலில் ஈடு கொடுத்து ஆடிய மணமகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR