அதிசயம்! வீட்டிற்குள் விழுந்த விண்கல்; நூலிழையில் உயிர் தப்பித்த பெண்..!!

கனடாவில் தனது வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பித்த சம்பவம், அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2021, 03:40 PM IST
  • கனடாவில் ஒரு பெண் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த பகீர் சம்பவம்
  • விண்கல் ஒன்று வீட்டின் கூரையைத் துளைத்து கொண்டு படுக்கையில் இருந்த தலையணையில் விழுந்தது.
  • ரூத் ஹாமில்டன் பயங்கர சத்தம் கேட்டு விழித்தெழுந்தார்.
அதிசயம்! வீட்டிற்குள் விழுந்த விண்கல்; நூலிழையில் உயிர் தப்பித்த பெண்..!!

கனடாவில் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) நடந்த ஒரு சம்பவம் கடவுளின் ஆசி இருந்தால், பயங்கரமான ஆபத்தில் இருந்தும் தப்பி விடலாம் என்பதை நிரூபித்துள்ளது. கடவுளின் அனுமதி இல்லாமல் கொல்ல முடியாது என்று கூறுவது நிச்சயம் உண்மைதான். கனடாவில் ஒரு பெண் தன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் (Meteor) அவளது வீட்டின் கூரையில் விழுந்தது. இந்த விண்கல் வீட்டின் கூரையை துளைத்து அந்த பெண்ணின் படுக்கையில் அவருக்கு மிக அருகில் வைத்திருந்த தலையணை மீது விழுந்தது. இந்த விண்கல் பெண்ணிடம் இருந்து சில அங்குல தூரத்தில் விழுந்ததால், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ரூத் ஹாமில்டன், திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார். இந்த சம்பவம் அக்டோபர் 4 இரவு நடந்தது என்று கூறப்படுகிறது. ஹாமில்டன் விக்டோரியா நியூஸிடம் இது குறித்து கூறுகையில், 'நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முன் ஒரு இரவில், லூயிஸ் ஏரி அருகே விண்கற்கள் விழுந்ததை மக்கள் பார்த்தனர்’ என்றார்.

ALSO READ | Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!

இந்த திகிலூட்டும் சம்பவத்தில், ஹாமில்டன் தப்பினார். படுக்கை அறை லைட்டை ஆன் செய்ததும், ​​அவரது தலையணையில் ஒரு விண்கல் (Meteor) விழுந்திருப்பதைக் கண்டார். அவர் உதவி எண்ணான 911 க்கு போன் செய்து அருகில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், விசாரணையில், விண்வெளியில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்ததாகக் அங்கிருந்த மக்கள் கூறினர்.

இதன் பிறகு ஹாமில்டனின் வீட்டில் ஒரு விண்கல் விழுந்தது தெளிவாகியது. இந்த திகிலூட்டும் அனுபவத்தைப் பற்றி ஹாமில்டன் கூறுகையில், சத்தத்தை கேட்டு யாரோ கூரையை உடைக்கிறார்கள் அல்லது துப்பாக்கியினால் சுடுகிறார்கள் என நினைத்து பயந்தேன். விண்கல் விண்வெளியில் இருந்து விழுந்தது என்பதை உணர்ந்தபோது, ​​மயிரிழையில் உயிர் தப்பித்ததை நினைத்து நிமத்தி பெருமூச்சு விட்டேன் என்றார்.

விண்கல்லை பேரக்குழந்தைகள் பார்க்க வேண்டும் என அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார். இந்த சம்பவம் தனக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். வாழ்க்கை விலைமதிப்பற்றது, அதை எந்த நேரத்திலும் இழக்கலாம்.நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் பாதுகாப்பாக தூங்கும் போது உயிரிழக்கலாம் என அவர் கூறினார்.

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News