)
Israel Iran Viral Video: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் தற்போதைய பதற்றம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் அதிகரித்து வருகின்றது. இரு நாடுகளிலும் வானிலிருந்து ஏவுகணைகளும், குண்டுகளும், ட்ரோன்களும் மழைபோல் பொழிந்த வண்ணம் உள்ளன.
ஈரான், இஸ்ரேல் என இரு நாடுகளும் மக்கள் அதிகமாக உள்ள நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் சண்டையிட்டு வருகின்றன. முக்கிய கட்டிடங்கள், அமைப்புகள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. தொலைக்காட்சியில் நாம் காணும் காட்சிகள் பீதிய ஏற்படுத்துகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பான பல வீடியோக்கள் தினம் தினம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இந்தச் சூழலில், ஈரானில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலின் ஸ்டுடியோவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடர்பான ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஈரானில் முக்கியமான ஒரு அரசு தொலைக்காட்சி சேனல் உள்ளது. அதில் ஒரு பிரபலமான பெண் தொகுப்பாளினி தினமும் தொடர்ந்து செய்திகளை வழங்கி வருகிறார். இந்த ஸ்டுடியோ இஸ்ரேலால் தாக்கப்பட்டது. இஸ்ரேல் ஸ்டுடியோவில் நடத்திய இந்த தாக்குதல், செயலுத்தி ரீதியான, அதி முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலாக கருதப்படுகின்றது. அதுவும் அந்த தொகுப்பாளினி செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்டூடியோ துல்லியமாக தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்டுடியோ இஸ்ரேலால் தாக்கப்படும் வீடியோவும், பெண் தொகுப்பாளினி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடும் காட்சியும் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ: தொலைக்காட்சி சேனல் ஸ்டுடியோவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
Israel’s strike on Iran’s state TV was part of its broader mission to disrupt internal communications, spread propaganda, and sow chaos to accelerate regime change.
— M. Jibran Nasir(@MJibranNasir) June 16, 2025
What Israel didn’t anticipate was the defiance of anchor Sahar Emami—who, despite a clear missile warning,… pic.twitter.com/3J6mOswPJA
சுவாரஸ்யமாக, அதே பெண் தொகுப்பாளினி இந்தத் தாக்குதலில் இருந்து விரைவாக மீண்டதாகவும், அதுமட்டுமல்லாம, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் வேறொரு சேனலில் நேரலையில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்கே முக்கியமான உண்மை என்னவென்றால், ஈரானில் உள்ள ஒரு பொது தொலைக்காட்சி சேனலின் ஸ்டுடியோவில் இவ்வளவு துல்லியத்துடன் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அந்த நாட்டின் நேர்த்தியான தாக்குதல் அமைப்புகளுக்கு சான்றாக அமைகின்றது. ஆனால், ஈரானும் பின்வாங்கியதாகவோ அச்சப்பட்டதாகவோ தெரியவில்லை. இஸ்ரேலின் பல முக்கிய இடங்களை ஈரான் தரைமட்டமாக்கியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ஈரானுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தும் சாத்தியமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நாட்டின் தலைவரை அகற்றுவதே ஒரே சாத்தியமான தீர்வு என்றும் அவர் கூறியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ