Viral: படுக்கையறை கதவை சாத்த மறந்த தம்பதி! அவர்கள் உள்ளே செய்த செயலை...வாய் பிளந்து பார்த்த கூட்டம்...

Jaipur Couple Intimate Act Traffic Jam : ஒரு தம்பதி, தங்களின் படுக்கையறைக்கு ஸ்கிரீன் போட மறந்திருக்கின்றனர். இவர்களால் வெளியில் பெரிய ட்ராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 21, 2025, 08:08 AM IST
  • ஜன்னலை மூட மறந்த தம்பதி
  • அதனால் உருவான வாகன நெரிசல்
  • வைரலான வீடியோ
Viral: படுக்கையறை கதவை சாத்த மறந்த தம்பதி! அவர்கள் உள்ளே செய்த செயலை...வாய் பிளந்து பார்த்த கூட்டம்...

Jaipur Couple Intimate Act Traffic Jam : இப்போதெல்லாம் இணையத்தை திறந்தாலே, வினோதமான செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. மக்கள் அந்த அளவிற்கு இங்கிதம் அற்றவர்களாக மாறி விட்டார்களா, அல்லது இப்போதுதான் இது போன்ற விஷயங்கள் பல்வேறு சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறதா என தெரியவில்லை. ஜெய்பூரில், ஒரு தம்பதி ஸ்கிரீன் போடாமல் செய்த விஷயத்தை பார்த்து, மக்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

படுக்கையறை கதவை..

ஜெய்ப்பூரில், ஒரு தம்பதி 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை புக் செய்து, அங்கு சென்றிருக்கின்றனர். அவர்களின் அறையில் இருந்த ஜன்னல், கண்ணாடியால் ஆனதாக இருந்திருக்கிறது. வாசல் கதவை சாத்திய அவர்கள், ஜன்னலில் ஸ்க்ரீன் போட மறந்திருக்கின்றனர். பின்னர், பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டிருக்கின்றனர். 

அந்த ஆணும் பெண்ணும், பிசியாக இருந்த நேரத்தில் ஜன்னலுக்கு ஸ்க்ரீன் போடாததை கவனிக்கவில்லை. அப்படி ஸ்கிரீன் போடவில்லை என்றால், உள்ளே நடப்பது அனைத்தும் வெளியில் தெரியும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இவர்கள் இருக்கும் அறை, ரோட்டில் செல்லும் அனைவரும் பார்க்கும் வகையில் டிஸ்ப்லே செய்யப்பட்டிருக்கிறது. 

வாகன நெரிசல்..

இந்த தம்பதி, அறைக்குள் செய்வதை ரோட்டில் போவோர் அனைவரும் பார்த்திருக்கின்றனர். இவை எதையும் அறியாமல் அந்த தம்பதி தங்களின் வேலையில் பிசியாக இருந்திருக்கின்றனர். இதை பார்த்து ஷாக் ஆனவர்கள், அந்த இடத்தில் கூடி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர். கொஞ்ச நேரத்தில் இந்த கூட்டம் பெருகி இருக்கிறது. அந்த பக்கம் போனவர்கள், இங்கு என்ன இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே என்று அங்கு நின்று, நடக்கும் சம்பவத்தை பார்த்திருக்கின்றனர். ஒரு சிலர், தங்கள் செல்போனை வெளியில் எடுத்து நடப்பவற்றை காட்சி படுத்தி இருக்கின்றனர். ஒரு சிலர், அந்த தம்பதியை திட்டி தீர்த்திருக்கின்றனர்.

இந்த தம்பதி, தங்களது படுக்கையறையில் ஸ்க்ரீன் போட மறந்ததால், வெளியில் அத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. இந்த கூட்டத்தால், அருகில் இருக்கும் பாலத்தில் இருந்து சாலை வரை பெரிய வாகன நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது.

வைரலான வீடியோ..

இந்த 5 ஸ்டார் ஹோட்டலில் தம்பதி செய்த வேலையால் வெளியில் ஏற்பட்ட வாகன நெரிசல் அங்கு வேலை செய்யும் போக்குவரத்து போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, அந்த தம்பதி யார், என்ன என்பது குறித்த விவரம் எதுவும் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லலை. இவர்களுக்கு எதிராக எதுவும் புகார் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல, சில உயர்த்தர ஹோட்டல்களில், ஸ்கிரீன்கள் இருப்பதில்லை என்பதும் சிலரது குற்றச்சாட்டாக இருக்கிறது. 

இந்த தம்பதியை வீடியோ எடுத்த விஷமிகள், இதனை இணையத்திலும் பரவ செய்திருக்கின்றனர். நல்ல வேலையாக அவர்களின் முகம், இதில் தெரியவில்லை. இது போன்ற வீடியோவை இணையத்தில் ட்ரெண்ட் செய்தவர்களுக்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது, இன்னொருவர் வீட்டில் நடக்கும் நிகழ்வை எட்டி பார்ப்பது போல இருப்பதாகவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து..கட்டிப்பிடித்து சென்ற பெண்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | No Bra No Exam: உள்ளாடை அணியாத பெண்களை செக் செய்த ஆசிரியர்கள்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News