Woman Never Removed Make Up For 22 Years : பெண்கள் ஆண்கள் என்றில்லாமல், பாலின பாகுபாடின்றி அனைவரும் உபயோகிக்கும் பொருள் ஆகி விட்டது, மேக்-அப். ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான் மேக்-அப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். காலையில் போடும் மேக்-அப்பை மாலை அல்லது இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தவுடன் கலைக்காமல் உறங்க செல்ல கூடாது என்று அழகுக்கலை நிபுணர்கள் பலர் கூறுவதுண்டு. ஆனால், 22 வருடங்களாக முகத்தில் இருக்கும் மேக்-அப்பை கழுவாமல் ஒரு பெண் மேனேஜ் செய்து வருகிறார். அவர் ஏன் அப்படி செய்தார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
22 வருடங்களாக மேக்-அப்பை கழுவாத பெண்...
சீனாவில் இருக்கும் ஜிலின் எனும் மாகாணத்தில் 37 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், மேக்-அப் உடன் இருக்கும் தனது முகத்தை 22 வருடங்களாக கழுவாமலேயே இருந்திருக்கிறார். இவரது வாழ்க்கை குறித்து சீனாவின் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. இவரது கதை, தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.
15 வயதில் போட்ட மேக்-அப்
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பெண், தனது15 வயதில் மேக்-அப் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், அவரால் அதிக விலை கொடுத்து மேக்-அப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், விலை மலிவான காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி உபயோகித்திருக்கிறார். மேலும், இந்த பெண் மேக்-அப் அகற்றாமல் படுக்கைக்கு செல்வது, அடிக்கடி மேக்-அப்பை அகற்றுவது போன்ற பழக்கத்தை பின்பற்றாமல் இருந்திருக்கிறார். இதனால், அவருக்கு பின்னாட்களில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து இருக்கின்றன.
ஊசியால் வந்த வினை..
14 வருடங்களுக்கு முன்பு, அந்த பெண் செய்த வேலைதான் அவருக்கு பெரும் வினையாக மாறியிருக்கிறது. அவர், சீனாவில் இருக்கும் அழகு சாதன பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஒரு விலை மலிவான காஸ்மெட்டிக் ஊசியை (Injection) வாங்கி பயன்படுத்தி இருக்கிறார். இவர், தனது சருமம் பளீரென்று ஆக வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால், அந்த ஊசி அவருக்கு பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது தோலில், தடிப்புகள், தோல் சிவத்தல் மற்றும் கடினமாக மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.
அந்த பெண், ஒரு நேர்காணலிலும் கூட தனது சரும பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறார். அதில், தனது முகம் சிவந்து, வீங்கி அரிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் தன் முகம் கிட்டத்தட்ட கூடு போல மாறிவிட்டதாக தான் உணர்வதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது முகத்தில் இருந்த தோல் கடினமாக மாறி, வழக்கத்திற்கு மாறாக தோற்றமே மாறியிருக்கிறது. இது, அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் பேசியிருக்கிறார். மேலும், தனது பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள்ளேயே செலவிடுவதாகவும், இந்த பிரச்சனையால் உடல்-மன ரீதியாக பல போராட்டங்களை அனுபவித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இதற்காக தற்போது இந்த பெண் சிகிச்சையிலும் இருக்கிறார்.
மேலும் படிக்க | முதலிரவு முடிந்த அடுத்த நாளே... குழந்தையை பெற்ற மணப்பெண் - ஷாக்கில் மாப்பிள்ளை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ