)
Little Girl Viral Video: சமூக ஊடகங்களில் தினம் தினம் பல்வேறு புகைப்படங்களும், வீடியோக்களும், செய்திகளும் பகிரப்படுகின்றன. இவற்றில் சில இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று வைரல் ஆகின்றன. இந்த வீடியோக்களும் பதிவுகளும் நம்மை தினசரி வாழ்வின் இறுக்கத்திலிருந்து திசை திருப்பி நம் மனச்சோர்வை நீக்கி கேளிக்கையின் வழியாக அமைகின்றன.
சமூக ஊடகங்கள் வேடிக்கையின் தளமாக மட்டுமில்லாமல் விசித்திரமான, வினோதமான, உலகம் காணாத திறமைகளின் அரங்கேற்ற மேடையாகவும் அமைகின்றன. சமூக ஊடக வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் புகழ் பெற்று வைரலாகி வாழ்வில் முன்னேற்றம் கண்ட ஏராளமானோர் இருக்கின்றார்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவும் அப்படிப்பட்ட திறமையான பெண்ணின் சாகசத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆன்லைனில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில் ஒரு சிறுமி ரிஸ்க்கான ஒரு ஸ்டாண்ட் செய்வதை காண முடிகின்றது. அதுவும் அவர் தண்ணீரில் இந்த ஸ்டாண்டை செய்வது இன்னும் வியப்பை அளிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில் சேற்று நீரில் பெண் அச்சமின்றி பேக்பிளிப் (backflip) செய்கிறார். இதை பார்த்த இணையவாசிகள் திகைப்பில் உள்ளனர்.
இணையத்தை அதிர வைத்துள்ள இந்த வீடியோ 'mithithefighter' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பயனரால் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் அந்தப் பெண், 'நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நான் தண்ணீரில் பேக் பிளிப் செய்யப் போகிறேன்' என்று கூறுகிறார்
அடுத்து நாம் காணும் காட்சி கண்களையே நம்ப முடியாத அளவிற்கு வியப்பை அளிக்கிறது. மிகவும் துணிச்சலாக அவர் தண்ணீரில் பேக் பிளிப் செய்கிறார். லாவகமாக அவர் செய்யும் இந்த செயல், வீடியோவை காணும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்களும் கிடைத்து வருகின்றன.
அட்டகாசமான அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
நெட்டிசன்கள் அந்த சிறுமியை பாராட்டி பல வித கமெண்ட்களை அளித்து வருகிறார்கள். 'இந்த சிறுமியின் சாகசம் வியப்பை அளிக்கிறது' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 'மிகவும் நன்றாக செய்கிறீர்கள், ஆனால் ஜாக்கிரதியாக செய்யவும்' என மற்றொரு பயனர் அக்கறையுடன் தெரிவித்துள்ளார். 'உங்கள் திறமையை பாராட்டுகிறேன்' என மற்றொருவர் அந்த சிறுமியை பாராட்டி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ