Viral Story: வீட்டின் ஒரு அறையில் கிடைத்த புதையல், யாரோ முகம் காணாத சொந்தக்காரர் விட்டுவைத்து போன சொத்து, கண்டுகொள்ளாத தாத்தா உயிலில் எழுதி வைத்த வீடு என இப்படி பல வழிகளில் பலர் திடீர் பணக்காரர்களாக மாறிய கதைகளை நாம் பல முறை கேட்டுள்ளோம், சமூக ஊடக பதிவுகளில் படித்துள்ளோம். அதே போன்ற ஒரு நிஜ நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு நபரின் தந்தை வாங்கி, பின் மறந்து போன பங்குகள் மூலம் தற்போது அந்த நபர் கோடீஸ்வரராகியுள்ளார்.
யாருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது? அந்த நபரை கோடீஸ்வரராக்கிய பங்குகள் எந்த நிறுவனத்தினுடையவை? இணையவாசிகளை பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்வு பற்றி இந்த பதிவில் காணலாம்.
தந்தை செய்த முதலீட்டின் மூலம் கோடீஸ்வரரான மகன்
ஒரு Reddit பயனர் சமீபத்தில் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பற்றி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது தந்தை 90 -களில் ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிடெட் (இப்போது JSW ஸ்டீல்) பங்குகளில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து சில பங்குகளை வாங்கி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் அவரது தந்தை அதை பற்றி மறந்தேபோனார். ஆனால், மகன் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் பழைய பங்குச் சான்றிதழைப் பார்த்துள்ளார். அவற்றின் மதிப்பை கண்டறிந்ததும், அவரால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.
JSW Share Certificates: பங்குச் சான்றிதழின் படம் வைரலானது
ரெடிட்டில் பகிரப்பட்ட இந்தக் கதையை முதலில் X இல் சவுரவ் தத்தா பகிர்ந்து கொண்டார். அவர், "ஒரு நபர் தனது தந்தையின் 90களின் JSW பங்குகளைக் கண்டுபிடித்துள்ளார். அவை அப்போது சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டன. இன்று அவற்றின் மதிப்பு ரூ.80 கோடி. சரியான பங்குகளை வாங்கி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு விற்க வேண்டும், இதுதான் லாபத்திற்கான தாரக மந்திரம்" என்று எழுதியுள்ளார். இந்த பங்குச் சான்றிதழ்களின் படமும் சமூக ஊடகங்களில் வைரலானது.
Guy on Reddit discovered JSW shares bought by his dad in the 1990s for ₹1L.
Worth ₹80Cr today.
Power of buy right sell after 30yrs. pic.twitter.com/mZTpGt4LII
— Sourav Dutta (@Dutta_Souravd) June 7, 2025
மஞ்சள் நிறம் படிந்து காணப்படும் இந்த பழைய தாள்களுக்கு பின்னால், பொறுமைக்கும், சரியான திட்டமிடலுக்கும் கிடைக்கும் பரிசு பற்றிய பெரிய பொருளாதார பாடம் ஒளிந்திருக்கின்றது.
இணையவாசிகளின் கருத்து
அன்ஹத் அரோரா என்ற பயனர், "ஸ்டாக் ஸ்ப்ளிட், போனஸ் பங்குகள் மற்றும் ஈவுத்தொகை போன்றவை சேர்ந்து முதலீட்டு தொகையை எவ்வாறு அதிகரிக்கின்றன என்பதை பலர் சரியாக புரிந்துகொள்வதில்லை. இது ஒரு மேஜிக் மந்திரம். இதற்கு இந்த நிகழ்வு ஒரு சரியான எடுத்துக்காட்டாக உள்ளது" என எழுதியுள்ளார். மற்றொரு முதலீட்டாளர், "ஒரு நல்ல வர்த்தகம் செய்யும் பங்கை அவசரத்தில் சீக்கிரம் விற்க வேண்டாம். நிறுவனத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால், காலம் அதன் வேலையைச் செய்ய காத்திருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார். மற்றொரு பயனர் நகைச்சுவையாக, "18 வயது ஆகும்போது என் இரண்டாவது டிமேட் லாக்-இன் -ஐத் திறக்குமாறு என மகனிடம் கூறியுள்ளேன். பாஸ்வர்ட் கோத்ரெஜ் லாக்கரில் உள்ளது!" என கூறியுள்ளார்.
முதலீட்டில் காம்பவுண்டிங்கிற்கு உள்ள முக்கியத்துவம் என்ன?
காம்பவுண்டிங் என்றால் வட்டிக்கு வட்டி. அதாவது, முதலீட்டிலிருந்து நீங்கள் எவ்வளவு வருமானம் பெற்றாலும், அடுத்த முறை அந்த வருமானத்திற்கும் வட்டியும் கிடைக்கும். இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்கிறது. படிப்படியாக உங்கள் மூலதனம் ஒரு பனிப்பந்து போல வளர்கிறது. உதாரணமாக, நீங்கள் 30 ஆண்டுகளுக்கு 12 சதவீத ஆண்டு வருமானத்தில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், அந்தத் தொகை சுமார் ரூ.30 லட்சமாக மாறக்கூடும். ஆனால் நிறுவனம் தொடர்ந்து போனஸ் கொடுத்துக் கொண்டிருந்தால், ஈவுத்தொகை வந்தால், பங்குப் பிரிப்புகள் நடந்தால், இந்தத் தொகை பல கோடிகளை எட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை மனதில் கொள்வது அவசியம். ஒரு முதலீட்டாளராக பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகின்றது.)
மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் காதல்..நேரில் சந்தித்த போது வந்த ட்விஸ்ட்! என்னாச்சு தெரியுமா?
மேலும் படிக்க | மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு: வைரல் ஆகும் திருமண வீடியோவில் மறைந்திருக்கும் தடயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ