Layoff Stories: உலகம் முழுதும் AI தொழில்நுட்பம் மெல்ல மெல்ல தன் இருப்பை அதிகரித்து வருகின்றது. மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான இந்த போட்டியில், சில மனிதர்களே மனிதர்களுக்கு பதிலாக இயந்திரத்தை தேர்ந்தெடுக்கும் போக்கு தொடங்கிவிட்டது. பல பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த போக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே பல நிறுவனங்கள் இதை வருடாந்திர செயல்முறையாகவே செய்து வருகின்றன.
Microsoft Layoff
உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் சமீபத்தில் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 3 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்த சுமார் 6,800 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையை இழந்தனர். இந்த நடவடிக்கை நிறுவனத்தின் ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் சுமார் 10,000 பணியாளர்களை மைக்ரோசாப்ட் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்டிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய இடியாய் வந்துள்ளது. சிலர் இன்னும் இதை நம்ப முடியாமல் உள்ள நிலையில், சிலர் அடுத்த வேலை தேடும் முயற்சிகளிலும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் முயற்சிகளிலும் மூழ்கிவிட்டனர். சிலர் தங்கள் அனுபவங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த தருணம்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்ததாகக் கூறும் ஒரு ஊழியர், தான் பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக இருப்பதை உணர்ந்த தருணத்தை விவரித்தார். “POV: நான் இன்று MSFT இலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். எனது ஸ்கிப் மூலம் எனது காலெண்டரில் ஒரு கடைசி நிமிட மீட்டிங் சேர்க்கப்பட்டது. அந்த மீடிங்கிற்கான அஜெண்டாவைக் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். FY26 இலக்குகளா? ரி-ஆர்க்? இப்படி பல கேள்விகள் என் மனதில் இருந்தன. அறிமுகமில்லாத ஒரு முகம் அந்த காலில் சேர்ந்தவுடன், நானும் மைக்ரோசாப்ட் பணிநீக்கங்களில் ஒரு பகுதியாக இருப்பதை விரைவாக உணர்ந்துவிட்டேன்" என்று அந்த ஊழியர் எழுதியுள்ளார்.
அடுத்த சில நாட்களில்....
அதிர்ச்சி மேலோங்கியுள்ள இந்த தருணத்திலும், மைக்ரோசாப்டில் தான் பெற்ற அனுபவத்திற்காக, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வமுள்ள துறைகளான அக்சசபிலிடி மற்றும் சஸ்டெய்னபிலிடி ஆகியவற்றில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். "அடுத்த சில நாட்களில் எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும், எனது புதிய வாய்ப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தனக்கான வாய்ப்புகள் ஏதேனும் இருந்தால், தன்னை தொடர்புகொள்ளுமாறும், அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “எனக்கு பொருத்தமான பதவி ஏதேனும் உள்ளதாக உங்களுக்குத் தெரிந்தால், அல்லது மீண்டும் இணைய விரும்பினால், கீழே தொடர்பு கொள்ளவும் அல்லது DM செய்யவும். உங்களிடமிருந்து செய்திகளை பெற விரும்புகிறேன்! எதிர்பாராத விதமாக வேலைச் சந்தையில் நுழைவதற்கு இது சிறந்த நேரம் அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து MSFTகளுக்கும் நான் நேர்மறையான எண்ணங்களை அனுப்புகிறேன். #OpentoWork," என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார்.
அவரது பதிவு ஆன்லைனில் வைரல் ஆனவுடன், சமூக ஊடக பயனர்கள் அவரது பதிவுக்கு ஆதரவாக பல பதில்களை அனுப்பினர். பலர் அவருக்கு ஊக்கமளியத்து பிற நிறுவனங்களுக்கான பரிந்துரைகளையும் வழங்கினர்.
இந்தப் பதிவிற்கு பதிலளித்த ஒருவர், “இதைப் பற்றிக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். அடுத்த சேப்டர் லோட் ஆகிக்கொண்டிருக்கிறது... நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், “கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அமேசானில் சேர நீங்கள் விரும்பினால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்; நான் உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்!" என்று எழுதினார்.
"உங்கள் வேலை வேட்டைக்கு வாழ்த்துக்கள்! தனிப்பட்ட முறையில், நான் தொழில்முறை மாற்றங்களைச் சந்திக்கும்போது, என்னென்ன வேலைகள் உள்ளன, யார் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதற்கான மதிப்புமிக்க ஆதாரமாக தொழில்முறை குழுக்கள் மற்றும் மாநாடுகளை நான் நம்புகிறேன்!" என்று ஒரு பயனர் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
பணிநீக்கங்கள் செயல்திறன் தொடர்பானவை அல்ல என்றும், அவை நிலைகள், அணிகள் மற்றும் புவியியல் இருப்பிடங்களில் பரவி இருக்கின்றன என்றும், இவை நிறுவன அளவிலான மாற்றத்தை பிரதிபலிக்கின்றன என்றும் CNBC இன் அறிக்கை தெரிவிக்கின்றது. எனினும் சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட பணி இடங்கள் குறித்து நிறுவனம் எந்த வித விவரங்களையும் வழங்கவில்லை என்றாலும், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் இயக்கப்படும் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில் சுறுசுறுப்பாகவும் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை நிறுவனம் வலியுறுத்தியது.
சமீபத்திய பணிநீக்கங்கள் ஒரு நிறுவன மறுவடிவமைப்பு உத்தியின் ஒரு பகுதியாகும் என்றும், ஒரு மாறும் சந்தையில் வெற்றிக்கு நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான நிறுவன மாற்றங்களை நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை பொறுத்தவரை, அலுவலக கியூபிகல்களை தாண்டி பெரிய ஒரு உலகம் உள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு முடிவு மற்றொரு விஷயத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம் என்பதை திடமாக நம்புவது தளர்வான தருணங்களில் நம்மை ஊக்குவிக்கும்.
மேலும் படிக்க | Layoff: சென்றுவா என அனுப்பிய கூகிள்... ரூ.2.6 மாத சம்பளத்துடன் வென்று காட்டிய நபர்
மேலும் படிக்க | Doctor Death சீரியல் கில்லர் பற்றி தெரியுமா! அதிர வைக்கும் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ