வாடா பாத்துர்லாம்!! நாகப்பாம்பை வம்பிழுக்கும் குறும்புக்கார குரங்கு: வீடியோ வைரல்

Snake and Monkey Video: குரங்கு தொடர்ந்து பாம்பை வெறுப்பேத்தி வம்பிழுப்பதை நாம் வீடியோவில் காணலாம். இது பாம்புக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அந்த பாம்பு என்ன செய்கிறது என்பதை வீடியோவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2023, 05:23 PM IST
  • குறும்புக்கார குரங்கு மற்றும் பாம்பு சண்டை.
  • குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம்.
  • இன்றைய வைரல் வீடியோ.
வாடா பாத்துர்லாம்!! நாகப்பாம்பை வம்பிழுக்கும் குறும்புக்கார குரங்கு: வீடியோ வைரல் title=

இன்றைய பாம்பு மற்றும் குரங்கின் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஏனெனில் குரங்குகள் மிகவும் குறும்புதம் செய்யும் விலங்குகளில் ஒன்றாகும், அதற்கு காரணம் குரங்குகளின் மனநிலையை கணிப்பது மிகவும் கடினம். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். இந்த குரங்கு பொதுவாக எந்த விலங்கையும் கண்டு பயப்படுவதில்லை, அதேபோல் மற்றவர்களுக்கு தொல்லைகளை உருவாக்குவதைத் தவிர்ப்பதில்லை. இதற்கிடையில், ஒரு குரங்கு விஷமுள்ள பாம்புடன் நேருக்கு நேர் மோதும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த குறும்புக்கார குரங்கு தொடந்து அங்கிருந்த விஷப்பாம்பை உதைத்து தொல்லை செய்கிறது. இதனால் கோபம் கொண்ட பாம்பு என்ன செய்கிறது என்பதைப் பார்த்து, உங்கள் நிலை மோசமாகிவிடும். இந்த வீடியோ சற்று பழையது என்றால் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | சவாரி செய்ய போய் பல்பு வாங்கிய நபர்: மாஸ் காட்டிய குதிரை.... வைரல் வீடியோ

குறும்புக்கார குரங்கு மற்றும் பாம்பு சண்டை
காணொளியின் தொடக்கத்தில், குரங்கும் பாம்பும் ஒரு காட்டில் நேருக்கு நேர் வருவதைக் காணலாம். இதற்குப் பிறகு குரங்கு பாம்புடன் வாமிழுப்பதைக் காணலாம். அப்போது குரங்கு தன் கால்களால் அந்தப் பாம்பை தொடர்ந்து உதைத்துக் கொண்டே இருக்கிறது. இது பாம்புக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அந்த பாம்பு குரங்கை கடுமையாக தாக்குகிறார். இருப்பினும், குரங்கு மிகவும் குறும்புத்தனமானக, மீண்டும் பாம்பின் தாக்குதலில் இருந்து தப்பிக்கிறது.

குறும்புக்கார குரங்கு மற்றும் பாம்பு சண்டை வீடியோவை இங்கே காணுங்கள்:

பாம்பு குரங்கைத் தாக்க முயல்வதைக் காணலாம். அதே சமயம், குரங்கும் பாம்பை அசிங்கப்படுத்துவது போல் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறது. பாம்பும் பலமுறை குரங்கை விரட்ட முயன்றும், குரங்கு ஓடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இதன் பிறகு பாம்பு தானே பின்வாங்கி அங்கிருந்து வெளியேறுகிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

குரங்கின் இந்த வேடிக்கையான செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ டிவிட்டரில் @susantananda3 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

 மேலும் படிக்க | பூனையை காப்பாற்றும் நாய்: நெட்டிசன்களை உலுக்கிப்போட்ட வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News