130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?

130 Obscene Videos Found In BJP President Son Phone : பாஜக பிரமுகரின் மகன் ஒருவர் இடத்தில் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2025, 05:59 PM IST
  • மணிப்பூரில் நடந்த சம்பவம்
  • 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்..
  • என்ன நடந்தது? இதோ விவரம்
130 ஆபாச வீடியோக்கள்..சிக்கிய பாஜக பிரமுகரின் மகன்-நடந்தது என்ன?

130 Obscene Videos Found In BJP President Son Phone : உத்தர பிரதேசத்தில் இருக்கும் மனிப்பூரில் உள்ள மகிளா மோர்ச்சா நகர தலைவர், சீமா குப்தா. இவரது மகன் சுபம் குப்தா, சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

மணிப்பூர் பாஜக மாநில தலைவரின் மகன் சுபம் குப்தா, பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம், அவ்வூர் பாஜக கட்சி உறுப்பினர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுபம் குப்தா, பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். எனவே, இவரது இந்த செயல் மக்களையும் அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

யார் இவர்?

சுபம் குப்தா, ஷீத்தல் என்பவரை 2021ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்தான் இத்தனை பெரிய சம்பவம் வெளியில் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஷீதல், தனது கணவர் சுபம் பல பெண்களுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருப்பதாகவும், உடலுறவு கொள்ளும் போது அதனை வீடியோவாக பதிவிட்டுக்கொள்ளும் பழக்கம் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக அவர் துன்புருத்தியதாகவும், தன்னை வலுக்கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்ததாகவும் கூறியிருக்கிறார். இவரிடம் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் ஷீத்தல் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவரது இந்த குற்றச்சாட்டுகள், தார்மீக முறைக்கேட்டை மட்டுமல்லாமல் துன்புறுத்தல், குற்றவியல் நடத்தையாகவும் கருதப்படுகிறது.

கேள்வி கேட்ட மக்கள்:

ஷீதலின் மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டுமென, பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மீது கடும் அழுத்தத்தை கொடுத்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சுபம் குப்தாவின் தாயார் சீமா குப்தா பெண்ணுரிமை குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பேசியதை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் இவர், பாஜக தலைவரின் மகன் என்கிற ஒரு ஆயுதத்தை வைத்து இதிலிருந்து தப்பித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

போலீஸார் வழக்குப்பதிவு:

தனது தாய் ஒரு பாஜக தலைவர் என்று கூறி, தன்னை எதுவும் செய்ய முடியாது என்று சுபம் குப்தா தன்னை மிரட்டியதாக ஷீத்தல் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் பெரிய தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதால் தான் என்ன வேண்டுமானால் செய்வேன் அவர் கூறினாராம். ஷீதலை அவர் வீட்டில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் பட்டினி கிடக்க வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஷீத்தல் இது குறித்து அளித்துள்ள புகாரின் பேரில் சுபம், சீமா உள்பட போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | புலியுடன் செல்ஃபி..அடுத்த நொடி நடந்த கொடூரம்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | Elon Musk முகத்தில் குத்தியது யார்? காயத்தின் காரணம் இவர்தான்: வைரல் ஆகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News