)
Viral Story: மும்பையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மாதம் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கிறாராம்!! ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை என அடித்துக்கூறுகிறார்கள் சில இணையவாசிகள். இணையத்தின் ஹீரோவாக இப்போது வலம் வந்துகொண்டிருக்கிறார் அந்த நபர். இது எப்படி சாத்தியமானது? ஆட்டோ ஓட்டினால் இவ்வளவு பணம் கிடைக்குமா? அந்த ஆட்டோ ஓட்டுநரின் ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அந்த ஆட்டோ ஓட்டுநர் மாதம் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிப்பது ஆட்டோ ஓட்டுவதன் மூலம் அல்ல. அவரது புத்திசாலித்தனமே அவருக்கு இந்த தொகையை அள்ளிக்கொடுக்கின்றது. ஆம்!! அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தங்கள் பொருட்களை வைக்க இடமில்லாமல் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களின் பைகளைப் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதன் மூலம் அவர் இந்த தொகையை சம்பாதிக்கிறார்.
லென்ஸ்கார்ட் பிராடெக்ட் லீடர் ராகுல் ரூபானி LinkedIn இல் பகிர்ந்துள்ள வைரல் பதிவில், இந்த புதுமையான வணிக மாடல் பற்றி கூறப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பைகளை பாதுகாப்பாக வைத்திருக்க இடம் இல்லாத மிகப்பெரிய பிரச்சனையை தீர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த பிசினஸ் மாடல் உருவாகியுள்ளது.
“பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் லாக்கர்கள் அல்லது மாற்று வழிகள் இல்லை என்றும், என் பையை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என்றும், நானே அதற்கு ஏதாவது வழி செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். அப்போதுதான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் வந்து, “சார், பையை கொடுங்க, பத்திரமா வெச்சிப்பேன், நான் தினமும் செய்யும் வேலைதான் இது, ₹1,000 கட்டணம்' என்று கூறினார்” என ராகுல் ரூபானி எழுதியுள்ளார்.
பதிவில் பெயரிடப்படாத ஓட்டுநர், தூதரகத்திற்கு வெளியே தினமும் தனது ஆட்டோவை நிறுத்தி, அங்கு வருபவர்களின் பைகளை தலா ₹1,000 க்கு பாதுகாப்பாக வைத்திருக்க முன்வருகிறார். ஒரு நாளைக்கு 20–30 வாடிக்கையாளர்களுடன், அவரது வருவாய் மாதத்திற்கு ₹5 முதல் ₹8 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நாள் முழுதும் அவர் சவாரிக்கு தனது ஆட்டோவை ஸ்டார்ட் கூட செய்வதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சட்ட வரம்புகளுக்குள் இருக்க, ஆட்டோ ஓட்டுநர், பாதுகாப்பான லாக்கர் வசதியை வைத்திருக்கும் அருகிலுள்ள உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு புத்திசாலித்தனமான யோசனை மூலம் நேர்மையான முறையில் கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகிறார் என ரூபானி கூறியுள்ளார்.
"ஒரு பெரிய சிக்கலைத் தீர்ப்பதில் ஒரு மாஸ்டர்கிளாஸ் தீர்வு" என்று ரூபானி அந்த மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார். 'எந்த வித App உதவியும் இல்லை, எந்த வித Funding இல்லை, பெரிய MBA படிப்பும் இல்லை', கூர்மையான உள்ளுணர்வு மற்றும் அசாத்திய புத்திசாலித்தனம் மட்டுமே அவரை உயர வைத்துள்ளதாக அவர் மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்துள்ளார்.
"இதை போன்ற உதாரணங்களையும் தொழில்முனைவு வகைகளையும் நீங்கள் வணிக புத்தகங்களில் படிக்க முடியாது. ஆனால், இது போன்ற சம்பவங்கள், 'நமக்கு ஏன் இப்படி முதலில் தோன்றவில்லை' என நம்மை யோசிக்க வைக்கும் அற்புதங்கள்" என அவர் எழுதியுள்ளார். இந்தப் பதிவு ஆன்லைனில் வைரல் ஆகி, ஆட்டோ ஓட்டுநர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ