Donald Trump Viral News: எப்போதும் உலக மக்களை தன்னை பற்றி பேச வைக்கும் திறன் படைத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக இவர்களை பற்றிய பேச்சுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களின் லிஸ்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் இடத்தில் இருக்கிறார் என்றே கூறலாம். இவரது நடவடிக்கைகளால் இவர் பல சமயம் சர்ச்சைக்கு ஆளாகிறார், சில சமயங்களில் இவர் ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் இவரை சுற்றி நடக்கும் விஷயங்களாலும் இவர் உலகம் முழுதும் பேசுபொருளாகி விடுகிறார்.
தற்போதும் அப்படி ஒரு நிகழ்வுதான் நடந்துள்ளது. நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ஹேக்கில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தற்செயலாக "டேடி" அதாவது "அப்பா" என்று அழைத்து சமூக ஊடகங்களில் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்பின் பங்கைப் பாராட்டுவதற்காகக் கூறப்பட்ட இந்த வார்த்தை, இணையவாசிகளை ஓவர்டைம் பார்க்க வைத்துள்ளது. நெட்டிசன்ஸ் காட்டிய ஆர்வத்தால், வெள்ளை மாளிகையே இந்த நகைச்சுவை விருந்தில் சிறிது நேரத்திற்கு சேர்ந்துகொண்டது.
நேட்டோ பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கான டிரம்பின் முயற்சி பற்றி ரூட்டே உரையாற்றியபோது இந்தக் கருத்து வந்தது. "அப்படியானால் அப்பா சில சமயங்களில் வலுவான நடவடிக்கைகள எடுக்க வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார். டிரம்ப் அவ்வப்போது எடுக்கும் அச்சமற்ற, திடமான முடிவுகளை பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், சமூக ஊடகங்களுக்கு 'அப்பா' என்ற வார்த்தை மட்டுமே காதில் விழுந்தது.
டொனால்ட் டிரம்பின் ரியாக்ஷன்
ஒரு பத்திரிகையாளர் தனது நேட்டோ கூட்டாளிகளை குழந்தைகளாகக் கருதுகிறீர்களா என்று கேட்டபோது, டொனால்ட் டிரம்ப், "அவர் அதை மிகவும் பாசத்துடன் செய்தார். டேடி, யு ஆர் மை டேடி" என்று பதிலளித்தார். டிரம்பின் ரியாக்ஷன் மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. பலர் அவரது பதிலை ரூட்டேவின் கருத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
Better angle of Marco Rubio's reaction after reporter asks a question to "daddy" Donald Trump pic.twitter.com/iRsT26DhE5
— Charlie Spiering (@charliespiering) June 25, 2025
வெள்ளை மாளிகையும் இந்த நகைச்சுவை கலாட்டாவில் சேர்ந்துகொண்டது. X இல் அமெரிக்க அதிபரின் நேட்டோ உச்சிமாநாட்டின் வீடியோவைப் பகிர்ந்து கொண்ட வெள்ளை மாளிகை அதன் பின்னணியில் Usher’s Daddy’s Home பாடலை சேர்த்திருந்தது. பதிவில் 'Daddy’s home… Hey, hey, hey, Daddy' என்றும் எழுதப்பட்டிருந்தது.
Daddy’s home… Hey, hey, hey, Daddy.
President Donald J. Trump attended the NATO Summit in The Hague, Netherlands. pic.twitter.com/asJb5FD2Ii
— The White House (@WhiteHouse) June 26, 2025
வேலையில் இறங்கிய நெட்டிசன்ஸ்
சில நிமிடங்களில், "டேடி" என்ற வார்த்தை டிரம்பிற்கு இணையத்தில் புதிய புனைப்பெயராக மாறியது. X ரியாக்ஷன்கள் வந்து குவிந்தன. ஒரு பயனர், "நாம் சிறந்த காலக்கட்டத்தில் வாழ்கிறோம். நேட்டோ தலைவர் டிரம்பை அப்பா என்று அழைத்துள்ளார். இணையவாசிகளுக்கு இது போதும்" என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "மார்க் ரூட்டே ஒரே வார்த்தையில் ஆயிரம் மீம்ஸ்களை வெளியிட்டுவிட்டார்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
“இந்த நேட்டோ உச்சி மாநாடு முழு நகைச்சுவையாகிவிட்டது” என்று ஒருவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். பத்திரிகையாளரின் கேள்விக்கு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் ரியாக்ஷனும் இணையத்தால் தவறவிட முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நகைச்சுவையான தருணத்தால், உச்சிமாநாட்டின் கவனம் உலகளாவிய பாதுகாப்பு என்ற விஷயத்திலிருந்து திசைதிருப்பப்பட்டதாகவும் பல இணையவாசிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | 22 ஆண்டுகளாக மேக்-அப் கலைக்காமல் இருக்கும் பெண்! இதனால் என்ன ஆச்சு பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ