No Bra No Exam Viral Video : தேர்வு எழுத செல்ல வேண்டும் என்றால், நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? பேனா, பென்சில், தேவைப்பட்டால் அளவுகோல், ஷார்ப்னர், அழிப்பான் இவை மட்டும்தான் அல்லவா? இதை தவிர்த்து, பார்த்து எழுதுவதற்காக நாம் பிட்டுகளை எங்காவது மறைத்து வைத்திருக்கிறோமா, புத்தகத்தை தேர்வு அறைக்குள் எடுத்து செல்கிறோமா, அருகில் இருப்பவரை பார்த்து எழுதுகிறோமா என்பதை பார்க்க ஒரு கண்காணிப்பாளரும் நம் கூடவே இருப்பார். இவை அனைத்தையும் தாண்டி, ஒரு வழியாக தேர்வை எழுதிவிட்டு வருவோம். ஆனால், இங்கு ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில், Bra அதாவது, உள்ளாடை அணியாமல் வந்த பெண்களை தேர்வு எழுத விடாமல் செய்திருக்கின்றனர். இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
வைரலான வீடியோ:
ஒரு நைஜீரியன் ஒலபிசி ஒனபாஞ்சோ என்கிற பல்கலை கழகத்தின் வீடியோதான் இத்தனைக்கும் காரணமாக இருக்கிறது. சமீபத்தில் வைரலான அந்த வீடியோவில் ஒரு தேர்வுக்கு முன்பாக, ஒரு மாணவியை பிரா அணிந்திருக்கிறாரா இல்லையா என்று சோதிக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Olabisi Onabanjo University OOU allegedly enforces the new “No bra, No entry” policy as exams start yesterday pic.twitter.com/84LEPveGvZ
— Oyindamola (@dammiedammie35) June 17, 2025
சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், தேர்வு எழுத வரும் மாணவிகளின் மார்பகங்களை, ஆசிரியைகள் தொட்டு பார்த்து, உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதை பரிசோதிக்கிறார். பிரா அணிய வேண்டும் என்பது, அந்த பல்கலைக்கழகத்தின் ஆடை கோட்பாடு என கூறப்படுகிறது. அதை சோதிப்பதற்காகவே அவர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.
இந்த ஆடை பரிசோதனை, உலக மக்களால் கண்டனங்களுக்கு உட்பட்டு வருவதை ஒட்டி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இது குறித்து எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவர் (ஆண்) ஒருவர், கவனச்சிதறலை தவிர்ப்பதற்காக இப்படி ஒரு நடைமுறை இருப்பதாக கூறியிருக்கிறார். இதை நியாயப்படுத்தினாலும், இதை வேறு மாதிரியாக கையாண்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது பாலியல் ரீதியானது என்றும், இழிவானது என்றும் பிறர் கூறிய விமர்சனங்களையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
பல்கலைக்கழகத்தின் ஆடை கோட்பாடுகள்:
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் எது போன்ற ஆடை கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்கிற விவரமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“No bra. No entry” is not a new policy in Olabisi Onabanjo University.
OOU promotes a dress code policy aimed at maintaining a respectful and distraction-free environment, encouraging students to dress modestly and in line with the institution's values. https://t.co/xO70cBiabG pic.twitter.com/pTWjpABFmT
— ART&SCIENCE (@MAO_of_Africa) June 17, 2025
அதில், உடலின் எந்த பாகத்தை காண்பிக்கும் ஆடையை அணிய கூடாது, ட்ரான்ஸ்பரண்ட் ஆடைகளை அணிய கூடாது, உடலுடன் ஒட்டிய ஆடைகளை அணிய கூடாது, உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை அணிய கூடாது என்றுபல கட்டுப்பாடுகள் இதில் விதிக்கப்பட்டுள்ளன. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த ஆடை கட்டுப்பாடுகளில் முக்கால் வாசி பெண்களை குறிவைத்தே இருக்கின்றன.
மேலும் படிக்க | கடலுக்கு அடியில் வாழும் பழங்குடியினர்! தண்ணீரை விட்டு வரமாட்டார்கள்!
மேலும் படிக்க | பைக் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து..கட்டிப்பிடித்து சென்ற பெண்! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ