சுட்டிகளின் மனதை வென்ற ‘டோரா’ தற்போது திரைப்படமாகிறது!

குழந்தைகளின் மனதை வென்ற கார்டூர் கதைகளில் ஒன்று ‘டோராவின் பயணங்கள்’. இதில் டோரா-வாக வந்த பள்ளி சிறுமி கதாப்பாத்திரம் குழந்தைகளின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Updated: Mar 25, 2019, 02:13 PM IST
சுட்டிகளின் மனதை வென்ற ‘டோரா’ தற்போது திரைப்படமாகிறது!
Screengrab

குழந்தைகளின் மனதை வென்ற கார்டூர் கதைகளில் ஒன்று ‘டோராவின் பயணங்கள்’. இதில் டோரா-வாக வந்த பள்ளி சிறுமி கதாப்பாத்திரம் குழந்தைகளின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த குழந்தை கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. ‘Dora and the Lost City of Gol’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவதாக ரஸ்யாவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜேம்ஸ் பாபின் இயக்கத்தில், இசபெல்லா மோனர் டோராவாக நடிக்கும் இத்திரைப்படத்தில் தொலைந்து போன தன் பெற்றோர்களைத் தேடிச் செல்லும் டோராவுடன், புஜ்ஜி (பூட்ஸ்), குள்ள நரி (ஸ்வைப்பர் தி ஃபாக்ஸ்), டீயகோ போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. தொலைந்த தங்க நகரத்தையும் கண்டுபிடிப்பதுதான் படத்தின்  கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளனர்.

அனிமேசன் படமாக அல்லாமல், ஒரு லைவ் ஆக்சன் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 

தொலைக்காட்சிகளில் பிரபலமான டோரா கதாப்பாத்திரம் தற்போது வெள்ளிதிரையில் காலடி எடுத்துவைத்துள்ளது. தற்போது சிறுவர்களின் விருப்பமான கதாப்பாத்திரமாக இருக்கும் டோரா இத்திரைப்படத்தின் மூலம் அட்வேன்சர்ஸ் விரும்பும் இளைஞர்களின் விருப்ப கதாப்பாத்திரமாகவும் வளம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.