Pisasu 2: நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகியாகவும் இருக்கும் ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக நிர்வாணமாக நடித்து இருக்கிறார்.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 12, 2021, 06:38 PM IST
Pisasu 2: நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகர் ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  

தற்போது ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah) மிஷ்கினின் ‘பிசாசு 2’ (Pisassu 2) படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்களிடைய இந்த படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ALSO READ | தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்ஸ் உடன் மிஷ்கின் வேற லெவல் கொண்டாட்டம்

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்துகொடுத்துள்ளாராம். மேலும் அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.

ALSO READ | பிசாசு 2 படத்தின் first look-க்கும் Andrea-வுக்கும் இப்படி ஒரு connection இருக்கா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News