)
Raja Raghuvanshi Murder Case Viral News: மேகாலயாவில் கொல்லப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் மரண வழக்கில் நாளுக்கு நாள் மர்மம் அதிகரித்து வந்த நிலையில், அவரது மனைவி பற்றிய தகவல்கள் கிடைத்தபின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கேள்விகளே அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.
Raja Raghuvanshi Sonam Wedding Video
இதற்கிடையில், சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதில் ராஜா மகிழ்ச்சியுடன் காணப்படும் அதே வேளையில் சோனம் சோகமான முகத்துடனேயே காணப்படுகிறார். இது இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வீடியோவில், ராஜா ரகுவன்ஷி சோனம் நெற்றியில் குங்குமம் இடுவதை காண முடிகின்றது. திருமண சடங்குகளை ஒரு புரோகிதர் நடத்தி வைப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகின்றது.
Just take a look at this wedding video of Sonam and Raja Raghuvanshi and you will agree that Sonam was clearly not happy with this marriage.
— Incognito (@Incognito_qfs) June 9, 2025
Raja Raghuvanshi would have been alive if Sonam had said No to the marriage. She had the courage to hire contract killers but didn't had… pic.twitter.com/NbHlQQWzXK
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது முதல் இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'பெண்ணின் முகத்தை பார்த்தால் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது' என ஒருவர் எழுதியுள்ளார். 'திருமணங்களை இறுதி செய்வதற்கு முன்பு குடும்பங்கள் கண்டிப்பாக மணப்பெண் மற்றும் மணமகனின் பின்னணியை நன்றாக சரிபார்க்க வேண்டும்.' என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
'இவ்வளவு சோகத்துடன் திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக அந்த பெண் அப்போதே திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியிருக்கலாம். ராஜாவாவது உயிருடன் இருந்திருப்பார்' என மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.
மேகாலயாவில் சோனமும் ராஜாவும் தேன் நிலவிற்கு சென்றபோது, அவரது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சோனம் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
நாடே உற்றுநோக்கிய ஹனிமூன் மர்மம்: என்ன நடந்தது?
ராஜா கொலை வழக்கின் முதற்கட்ட விசாரணையில், சோனம் ராஜ் குஷ்வாஹா என்ற நபருடன் உறவில் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் தெரியவந்தது. சோனம் ராஜாவைக் கொல்ல உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, மே 23 அன்று மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியும் காணாமல் போனார்கள். ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது. சோனம் (24) வாரணாசி-காஜிபூர் பிரதான சாலையில் உள்ள 'காஷி தாபா'வில் இரவில் மீட்கப்பட்டதாக காஜிபூர் காவல் கண்காணிப்பாளர் இராஸ் ராஜா தெரிவித்தார்.
ஆரம்ப கட்ட சிகிச்சைக்காக அவர் சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் இன்னலில் இருக்கும் பெண்களுக்கு உதவும் மையமான ஒன்-ஸ்டாப் சென்டரில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா காவல்துறை குழுக்கள் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று எஸ்பி கூறினார். இதற்கிடையில், இறந்த ராஜாவின் சகோதரரும் சோனமின் தந்தையும் சோனம் குற்றவாளி அல்ல என்று கூறி வருகிறரகள். மேகாலயா போலீசார் பொய் தகவல்களை கூறி வழக்கை திசைத்திருப்புவதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் சோனமின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
வைரல் ஆகி வரும் வீடியோவில் ராஜாவின் முக பாவங்களும் சோனமின் முக பாவங்களும் முற்றிலும் நேர்மாறாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. உண்மையில் ராஜாவை அவரது மனைவிதான் கொலை செய்தாரா? அல்லது, சோனம் நிரபராதியா? ராஜாவை கொன்றது யார்? சோனம் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? இந்த கேள்விகளின் விடைகளுக்காக நாடே பதட்டத்துடன் காத்திருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படவில்லை. இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ