Couple Got Married After 70 Years Of Live In Relationship : என்னதான் உலகம் மாடர்ன் ஆக மாறிவிட்டாலும், நம் ஊரில் இருக்கும் சில பெரியவர்களின் பூமர் கருத்துகளால் இன்னும் எதுவும் மாறாத உணர்வே வருகிறது. ஆனாலும், அவ்வப்போது அரிதாக உலகில் நடக்கும் சில விஷயங்களை பார்க்கும் போதுதான், கூடிய விரைவில் எல்லாம் மாறிவிடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.
70 வருட லிவ்-இன் ரிலேஷன்ஷிப்..
நம் ஊரில், காதலியின் தோள்மேல் காதலன் கைப்போட்டு அழைத்து சென்றாலே வேண்டா வெறுப்பாக பார்ப்பார்கள். அதையும் தாண்டி, இன்னும் பலர் திருமணத்திற்கு முன்பு ஒன்று சேர்ந்து வாழும் லிவ்-இன் உறவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இந்த முதியவரும் அவரது காதலியும் கிட்டத்தட்ட 70 வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்திருக்கின்றனர்.
அந்த முதியவரின் பெயர், பாய் கராரி. இவருக்கு வயது 95 ஆகிறது. இவரது காதலி, ஜீவாலி தேவி, இவர் 90 வயது மூதாட்டி. இவர்கள் ராஜஸ்தானில் இருக்கும் ஒரு மலைக்கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் திருமணத்திற்கு முன்னரே 8 குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு இவர்களுக்கு நிறைய பேரன்-பேத்திகளும் பிறந்திருக்கின்றனர். இவர்கள், காதலிக்க தாெடங்கிய நாளில் ஆரம்பித்து, சுமார் 70 வருடம் லிவ்-இன் உறவில் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணம்:
70 வருடமாக ஒருவர் மீது ஒருவர் பாசமாக, காதலுடன் வாழ்ந்து வந்ததை அடுத்து, தற்போது இருவரும் 90 வயதை தாண்டிய பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளே சேர்ந்து நடத்தியிருக்கின்றனர்.
இந்த வயதான தம்பதியினரின் மகன் காண்டி லால் கஹாரி, ஊடகத்தாரிடம் பேசியிருக்கிறார். அப்போது தனது பெற்றோர் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதில் ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொண்டு சிறப்ப்பாக நடத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கிராமத்து பெரியவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஹல்தி விழா ஜூன் 1ஆம் தேதி நடக்க, கடந்த ஜூன் 4ஆம் தேதி திருமணம் சிறப்பாக நடந்திருக்கிறது. இதில் ஒட்டுமொத்த கிராமமும் கலந்து கொண்டதாம்.
இந்த தம்பதியின் திருமண விழாவில் டிஜே மியூசிக், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் நடந்திருக்கிறது. இவர்கள், மந்திரங்கள் ஓத, கைக்கோர்த்து அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வந்தனர். மேலும், இந்த விழாவில், தடபுடலான விருந்தும் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களின் திருமணம், நாடா எனும் முறைப்படி நடந்திருக்கிறது. இது, ராஜஸ்தானின் சில பழங்குடியின மக்கள் கடைப்பிடிக்கும் முறையாகும். இதன்படி, இந்த பழங்குடியினத்தை சேர்ந்த எந்த ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொள்ளாமலேயே யாருடன் வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களின் தந்தை சொத்தில் சம பங்கும் இருக்கிறது. இருப்பினும் திருமணம் ஆகாதனிலை இருப்பதால் பெண்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றனவாம்.
மேலும் படிக்க | மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு: வைரல் ஆகும் திருமண வீடியோவில் மறைந்திருக்கும் தடயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ