Viral News: சமூக ஊடக பயனர்களுக்கு கூடிய விரைவில் ஒரு புதிய எமோஜி கிடைக்கவுள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த ஒரு செயல் சிரியாவின் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ஒரு பெரிய கொள்கை மாற்றத்தைத் தொடர்ந்து நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் எதிர்பாராத அடையாளமாக இது மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்தபோது, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் ரியாக்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ரியாத்தில் சமீபத்தில் நடந்த சவூதி-அமெரிக்க முதலீட்டு மன்றத்தின் போது கேமராவில் பதிவான இந்த தருணத்தில், சிரியா மீதான அமெரிக்கத் தடைகளை நீக்கியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மரியாதை மற்றும் பாராட்டுக்கான பாரம்பரிய சைகையாக, இளவரசர் முகமது தனது இரண்டு கைகளையும் மார்பில் வைத்து அழகாக புன்னகை செய்தார்.
فرحـة سمو ولي العهد الامير محمد بن سلمان بعد تصريح الرئيس الامريكي ترامب برفع العقوبات عن سوريا
فرحة زعيم ورجل غيور على عروبته ويريد النهضة للعرب
pic.twitter.com/kSClvHxM0E
இந்த செய்கை சவுதி மற்றும் அரபு நாடுகளின் சமூக ஊடகங்கள் முழுவதும் பரவியது. இணையவாசிகள் இதை படங்கள் மற்றும் வீடியோக்களில் ரீக்ரியேட் செய்யத் தொடங்கினர்.
இந்தப் படம் சிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரபலங்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மூலம் இந்த செய்கையை ரீக்ரியேட் செய்தனர்.
"இது ஒரு இயக்கம் மட்டுமல்ல; இது ஒரு செய்தி" என்று சிரிய சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஒருவர் கூறினார். "மாற்றத்திற்கான தருணத்தில் சவூதி அரேபியா சிரியாவுடன் நிற்கிறது என்றும், நம்பிக்கை மற்றும் ஒற்றுமை இருப்பது பற்றியும் இந்த செய்கை உலகிற்குச் சொல்கிறது." என்று அவர் தெரிவித்தார்.
கலைஞர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள் இணைந்து, பட்டத்து இளவரசரின் சைகையால் ஈர்க்கப்பட்ட டிஜிட்டல் விளக்கப்படங்கள் மற்றும் கேலிச்சித்திரங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரியாத் மற்றும் டமாஸ்கஸ் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான "வரலாற்று சிறப்புமிக்க சமிக்ஞை" என்று சிரிய வர்ணனையாளர்கள் இந்த தருணத்தைப் பாராட்டினர்.
இளவரசர் முகமது மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இடையே திரைக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தைகள், சிரியா மீதான தடைகளை நீக்குவதற்கான வெள்ளை மாளிகையின் முடிவைப் பாதித்ததில் முக்கிய பங்கு வகித்ததாக பலர் பாராட்டினர்.
இந்த செய்தி வெளியானதும், சிரியா முழுவதும் கொண்டாட்டக் காட்சிகள் வெளிப்பட்டன. சவுதி கொடிகளை அசைத்து நன்றி தெரிவிக்கும் மகிழ்ச்சியான கூட்டத்தைக் காட்டிய வீடியோக்கள், இந்த நடவடிக்கையை "நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட திருப்புமுனை" என்று வர்ணித்தன.
அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு தம்பதியினர் புதிதாக பிறந்த தங்கள் குழந்தைக்கு டிரம்ப் அகமது அல் சட்டூஃப் (Trump Ahmed Al Sattouf) என்று பெயரிட்டதாகக் கூறப்படுகிறது.
சவுதி இளவரசரால் ஈர்க்கப்பட்டு, அவர் செய்கையை போலவே புதிய எமோஜியை உருவாக்குவதற்கான முன்மொழிவை சவுதி மென்பொருள் பொறியாளர் அலி அல்-முதைரி யூனிகோட் கூட்டமைப்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் படிக்க | 2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ