Viral Video: தினம் தினம் சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை பெரும்பாலும் மிக வித்தியாசமான, அரிய நிகழ்வுகளை காட்டும் வகையில் இருக்கின்றன. சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன. சில வீடியோக்கள், சிந்திக்கவும் வைக்கின்றன.
பல நேரங்களில் இன்றைய உலகில் அரிதாகிவிட்ட மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டுகளாக பல சம்பங்கள் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பலம் சமீபத்தில் வைரல் ஆகி வருகின்றது. போக்குவரத்து நெரிசலில் ஓடி, விசில் அடித்துக்கொண்டே ஆம்புலன்ஸுக்கு வழி விட வாகனங்களை அப்புறப்படுத்திய ஒரு போலிஸ் கான்ஸ்டபிளின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஆம்புலன்ஸ் எந்த தடையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் ஓடிக்கொண்டிருந்த மணிகண்டன் என்ற அந்த கான்ஸ்டபிளுக்கு தான் இதன் காரணமாக பிரபலமாக உள்ளோம் என்பது அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் அந்த தருணத்தில் அதை பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஸ்டார் ஆன கான்ஸ்டபிள்
பாலக்காட்டில் உள்ள முட்டிக்குளங்கர ஏஆர் முகாமைச் சேர்ந்த போலீஸ்காரரான மணிகண்டன் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு நட்சத்திரமாக பிரபலமடைந்துள்ளார். ஒரே நாளில் இவர் அடைந்த இந்த பிரபலத்திற்கு காரணம் என்ன? மணிகண்டனை ஸ்டார் ஆக்கிய அந்த சம்பவம் பற்றி விரிவாக காணலாம்.
மணிகண்டன் ஆம்புலன்ஸுடன் ஓடி, நெடுஞ்சாலையில், ஆம்புலன்சுக்கு வழி அமைக்க போக்குவரத்தை சீர் செய்வதை காட்டும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது விரைவான மற்றும் தன்னலமற்ற செயலுக்காக அவர் இப்போது பரவலாகப் பாராட்டப்படுகிறார். சாலையில் வேகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு இடையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் இந்த செயல் அவரது தன்னலமற்ற மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த வீடியோ முதலில் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் வெளியிடப்பட்டது. பின்னர் கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களும் இதை பரப்பி வருகின்றன.
மணிகண்டன் தினமும் தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுக்கு சாலை வழியை சீர் செய்து, அவை தடையில்லாமல் அந்த இடத்தை கடக்க உதவுகிறார். பாலக்காடு கோட்டையைச் சேர்ந்த 33 வயதுடைய இவர், மூன்று மாதங்களுக்கு முன்பு காவல் துறையில் சேர்ந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்காடு நிலையத்திற்கு வந்த மணிகண்டன், அம்பல்லூரில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பொறுப்பில் இருந்தார். அம்பல்லூரில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆரம்பத்தில் அவருக்கு குழப்பம் இருந்தபோதிலும், ஆம்புலன்ஸ்களை விரைவாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் வெளியேற்றத் தொடங்கியதும் அந்த வேலை உற்சாகமாக மாறியதாக மணிகண்டன் கூறுகிறார்.
அவரது வேகம், விவேகம், ஆம்புலன்சுகள் தடையில்லாமல் பயணிக்க வேண்டும் என்ற விஷயத்தில் அவர் காட்டும் உறுதி, அவர் வேலையில் அவர் காட்டும் கண்ணியம் ஆகியவை இணையவாசிகளை கவர்ந்துள்ளன. பலரும் அவரை ஒரு ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் படிக்க | No Bra No Exam: உள்ளாடை அணியாதவர்களுக்கு தேர்வுக்கு அனுமதி மறுப்பு! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ