Viral Video Of King Cobra In Uttarakhand : இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்கள், நம் கண்களை நம்மால் நம்ப வைக்க முடியாதபடி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இப்போது AI-ன் ஆதிக்கமும் தலை விரித்தாடுவதால், எது உண்மை எது பொய் என்பதே பலருக்கு தெரிவதில்லை. நடிகைகளில் ஆரம்பித்து, காடுகளில் வாழும் மிருகங்கள் வரை அனைத்திற்கும் டீப் ஃபேக் கிராஃபிக்ஸ் என்பது வந்து விட்டது. அப்படி ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியாே..
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். ஆனால், அதே சமயத்தில் அந்த பாம்பிடத்தில் எந்த வித பய உணர்வோ தயக்க உணர்வோ இன்றி ஒரு சிலர் இயற்கையாக விளையாடுவதையும் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் முதலில், ஒருவர் மெத்தையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது ஏறி ஆளுயர ராஜநாகம் ஒன்று செல்கிறது. இது எப்படி, எங்கிருந்து வந்தது என்றெல்லாம் தெரியவில்லை. இந்த ராஜ நாகம் அப்படியே அவர் மீது மெதுவாக ஊர்ந்து எதையோ தேடுவது போல மேலே ஊர்ந்து செல்கிறது. மேலும், அந்த பாம்பு துணிகளுக்குள் புகுந்து அப்படியே மேலே ஏறுகிறது.
இப்போது இந்த இளைஞர் கேமராவை தனது முகத்தின் பக்கம் திரும்பி காண்பிக்கிறார். அப்போது அந்த இளைஞர் சிரிக்கிறார். கேமராவை திருப்பும் போது, அந்த ராஜ நாகம் இளைஞரையும் கேமராவையும் பார்த்துக்கொண்டு அப்படியே தனது நாக்கை நீட்டிக்கொண்டு அருகில் வருகிறது.
அந்த இளைஞர் கேமராவோடு கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் செல்ல, பாம்பு அவரை நோக்கி 4 அடிக்கு எழுந்து நின்று படமெடுத்து நிற்கிறது. பிறகு அந்த சுற்றி சில ஒலிகள் கேட்டாலும் கேமரா கீழே விழுந்து விட்டதால் அடுத்து என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
தீண்டாமல் சென்றது..
இந்த சம்பவமானது உத்தரகாண்டில் நடந்திருக்கிறது. இங்கிருக்கும் ஒரு கிராமத்தின் வீட்டில்தான் இந்த ராஜநாகமானது நுழைந்திருக்கிறது. அந்த நபர், பாம்பு உள்நுழையும் போது உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர், அந்த ராஜநாகம் மேலே ஏறி கீழே செல்லும் வரை அமைதியாக அசராமல் படுத்திருக்கிறார்.
உலகில் இருக்கும் பாம்புகளிலேயே, அதிக விஷம் வாய்ந்தது ராஜ நாகம் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் அந்த நாகம் இந்த நபரின் வீட்டுக்குள் நுழைந்து, அவர் மீது ஏறி புரண்டு, எதுவும் செய்யாமல் சென்றிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பல ஆச்சரியக்குறிகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | காருக்குள் பெண்ணுடன் சேட்டை செய்த பாஜக பிரமுகர்! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ