புலியுடன் செல்ஃபி..அடுத்த நொடி நடந்த கொடூரம்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of Tiger Attacking Tourist Thailand : ஒரு நபர், புலியிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது தாக்கப்பட்ட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 31, 2025, 11:54 AM IST
  • புலியுடன் செல்ஃபி எடுத்த நபர்
  • இந்திய சுற்றுலா பயணிக்கு நடந்த கொடூரம்..
  • வைரலாகும் வீடியோ..
புலியுடன் செல்ஃபி..அடுத்த நொடி நடந்த கொடூரம்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of Tiger Attacking Tourist Thailand : இணையத்தில் அதிர்ச்சிகர வீடியாே ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம், தாய்லாந்து நாட்டில் நடந்திருந்தாலும் இதில் பாதிக்கப்பட்டது ஒரு இந்தியர் ஆவார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தாய்லாந்து புலிகள் காப்பகம்..

இந்தியர்கள், அதிகம் சுற்றுலாவுக்கு செல்லும் இடமாக இருக்கிறது தாய்லாந்து. அழகிய கடற்கரைகள், அரண்மனைகள், மசாஜ் நிலையங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இங்கு இருக்கின்றன. இங்கு இருக்கும் இன்னொரு முக்கியமான இடம், Tiger Kingdom. இந்த இடம் காலை 9 முதல் 5 மணி வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கிறது. இந்த இடத்தில், சுற்றுலாவிற்கு வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து இங்கிருக்கும் புலிகளுடன் நேரம் செலவிடலாம். இங்கு புலியுடன் போட்டோ எடுத்து கொள்வதற்கும், அவற்றின் மேல் கைப்போட்டு விளையாடுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் விருப்பப்பட்டால் அவற்றிற்கு உணவும் கூட வழங்கலாம். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் அங்கு சென்ற ஒரு இந்திய சுற்றிலா பயணிக்குதான் அகோர நிலை ஏற்பட்டிருக்கிறது.

வைரலாகும் வீடியோ..

தாய்லாந்து புக்கெட் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், முதலில் அந்த இந்திய சுற்றுலா பயணி புலி நடந்து செல்லும் போது அதன் அருகில் நடந்து செல்வது பதிவாகியிருக்கிறது. அந்த புலியின் கையில் கட்டியிருக்கும் கயிற்றையும் அவர்தான் வைத்திருக்கிறார். பின்னர், புலிக்கு நிகராக மண்டியிட்டு அமர்கிறார். புலியை கண்காணிக்கும் பாதுகாவலர், புலியை அமர சொல்லி கொம்பை வைத்து மிரட்டுகிறார். இதையடுத்து, உருமிய அந்த புலி, சுற்றுலா பயணியை ஆக்ரோஷமாக தாக்குகிறது.

பின்னர் வீடியோ எடுக்கும் நபரும், புலியின் பாதுகாவலரும் புலியை கட்டுப்படுத்த முயற்சிப்பது பதிவாகி இருக்கிறது. புலியால் தாக்கப்பட்ட நபர் கதறுவதும், அவரை காப்பாற்ற பிறர் முயற்சி செய்யும் ஆடியோக்களும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

அவருக்கு என்ன ஆச்சு?

புலி, சுற்றுலா பயணியை தாக்கிய வீடியாே X, இன்ஸ்டாகிராம், பேஸ் புக் என அனைத்து தளங்களிலும் வைரலானது. இதை பார்த்த மக்கள், புலியால் தாக்கப்பட்ட அந்த நபருக்கு என்ன ஆனாதோ, ஏதானதோ என்று கவலை கொண்டனர். இதனால், அவர் பத்திரமாக இருக்கிறாரா என்றும் சிலர் கேட்டு வந்தனர்.

அந்த நபருக்கு, புலி தாக்கியதால் பெரிதளவு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, நெட்டிசன்கள் அவரவர் கருத்துகளை இணையத்தில் கூறிய வண்ணம் உள்ளனர்.

நெட்டிசன்களின் ரியாக்ஷன்..

புலியால் தாக்கப்பட்ட அந்த நபர், குறிப்பிட்ட இடத்தை விட, புலியின் பின்பகுதியில் தட்டியிருக்கலாம், அதனால் புலி கோபமடைந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், ”வன விலங்குகளை வைத்து இது போன்ற பாதுகாப்பு பூங்காக்கள் காசு பார்ப்பதே கொடுமை, இதில் புலியுடன் செல்ஃபி வேறா?” என்று கூறி வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | கடைசி நிமிடத்தில் கல்யாணத்தை நிறுத்திய பெண்! தாலியுடன் நின்ற மணமகன்..வைரல் வீடியாே..

மேலும் படிக்க | Ex காதலி மீது வெடிகுண்டு வீசிய காதலன்! கடைசியில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News