வேட்டையாட வந்த பாம்பு, காத்திருந்த ட்விஸ்ட்: பூனையின் வெறியாட்டம், வைரல் வீடியோ
Snake vs Cat: இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் நடக்கும் விஷயத்தை நம்மால் கண்டிப்பாக நம்ப முடியாது.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆச்சரியமான, அதிசயமான பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன். இவற்றை வீடியோவாக பார்த்தாலும், நம் கண்களையே நம்மால் நம்ப முடிவதில்லை. இப்படி கூட நடக்குமா என நம் மனதில் கேள்விதான் எழுகிறது.
தற்போது, இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பூனை ஒரு மூலையில் வசதியாக அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்கின்றது. இதை பார்த்து நம மனமும் பதட்டமாகிறது.
திடீரென்று ஒரு ஆபத்தான பாம்பு பூனை அருகே வருகிறது. அந்த பாம்பு பூனையை தாக்கத் தொடங்குகிறது. ஆனால், இதற்கு பிறகுதான் ட்விஸ்ட் உள்ளது. வீடியோவில் இதற்கு பிறகு நடக்கும் விஷயத்தை நம்மால் கண்டிப்பாக நம்ப முடியாது. அது பார்ப்பவர்களை உலுக்கிப்போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
மேலும் படிக்க | Lions vs crocodile: ஸ்கெட்ச் போட்டு முதலையை தூக்கிய சிங்கங்கள்! வீடியோ
பூனையைத் தாக்கிய பாம்பு
பூனை ஒரு இடத்தில் அமைதியாக அமைர்ந்திருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அப்போது அங்கு வரும் பாம்பு அதை தாக்குகிறது. பூனை உடம்பை தன் உடம்பால் முழுவதுமாக சுற்றிக்கொள்ளும் பாம்பு அதை பலமுறை கொத்துகிறது. வீடியோவை பார்த்தால் பாம்பு பூனையை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான காட்சி கண்முன் நடக்கிறது.
பாம்பின் ஆதிக்கத்தைப் பார்த்து பூனையும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. முதலில் தனது நகங்களால் பாம்பை தாக்கிய அந்த பூனை, திடீரென பாம்பின் பிடியிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு பாம்பை தன் பிடியில் வலுவாக பற்றிக்கொள்கிறது. பின்னர், தன் முழு ஆத்திரத்தையும் காட்டும் வகையில், பாம்பை கடித்து உயிருடன் மென்று சாப்பிடத் தொடங்கியது.
பாம்பு பூனையின் ஆபத்தான வீடியோவை இங்கே காணலாம்:
பாம்பும் பூனையைக் கொல்ல தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. ஆனால் பூனையின் நகங்கள் மற்றும் பற்களுக்கு முன்னால் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் வேட்டையாட வந்த பாம்பு தானே மாட்டிக்கொண்டு பலியாகி விட்டது. யாரையும் அதிர வைக்கும் அளவுக்கு இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில், bilal.ahm4d என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | Puppies Video: பீச்சில் விளையாடும் கலக்கல் ’குட்டிகள்’! இது Ball இல்லை பலூன் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ