நடுரோட்டில் பின்னிப்பிணைந்து.... கேமராவில் கைதான காதல்: இணையத்தை பற்ற வைத்த வைரல் வீடியோ

Snake Love Video: இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பும் ஒரு பெண் பாம்பும் காதலிக்கும் காட்சி கேமராவில் கைதாகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2025, 01:22 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pooja_rangra_official என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • இது பேசுபொருளாக மாறி, வைரலாக பரவி வருகிறது.
  • இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன.
நடுரோட்டில் பின்னிப்பிணைந்து.... கேமராவில் கைதான காதல்: இணையத்தை பற்ற வைத்த வைரல் வீடியோ

Snake Viral Video: சமூக ஊடகங்களில் தினம் தினம் பல வித வீடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்படுகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் சமூக ஊடகம் செயல்பட்டு வருகின்றது. நாம் நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். குறிப்பாக பாம்பு, குரங்கு, நாய், பூனை என சில மிருகங்களுக்கு இணையத்தி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு என கூறலாம். 

பாம்புகள் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. பாம்புகள் பெரும்பாலும் காடுகளிலும் புதர்களிலும், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் அரிய காட்சி ஒன்று காணப்படுகின்றது. மனிதர்கள் நடமாடும், வாகன போகுவரத்து அதிகமாக உள்ள சாலை ஒன்றில் பாம்புகள் காணப்படுகின்றன. 

கேமராவில் கைதான பாம்புகளின் காதல்

ஆனால், இந்த வீடியோவில் மற்றொரு அதிசய நிகழ்வையும் காண முடிகின்றது. பொதுவாக பாம்புகளுக்கு இடையிலான சண்டை காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், காதல் காட்சிகள் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன. இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பும் ஒரு பெண் பாம்பும் காதலிக்கும் காட்சி கேமராவில் கைதாகியுள்ளது.

சாலையில் ஒரு பாம்பு ஜோடி காதல் புரிவதை வீடியோவில் காண முடிகின்றது. பாச மிகுதியில் பாம்புகள் இரண்டும் பின்னிப்பிணைந்து அன்பை வெளிப்படுத்துகின்றன. இந்த ஜோடி பாம்புகளைப் பார்க்க சாலையில் ஒரு பெரிய கூட்டமே கூடியுள்ளதை வீடியோவில் காண்கிறோம். இந்தக் காட்சியைக் கண்டு சிலர் அதிர்ச்சியடைந்தனர். 

ஒருவர் இரு பாம்புகளின் மீதும் ஒரு துணியை போட முயற்சிக்கிறார். மற்றொருவர் அவற்றை சாலையில் இருந்து நகர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார். சிலர் இந்த தனித்துவமான காட்சியை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். வாகனங்களும் சாலையில் நின்றன. மொத்தத்தில் அங்கு ஒரு விசித்திரமான சூழல் உருவானது.

இறுதியாக, ஒரு நபர் அந்த பாம்பு ஜோடியை ஒரு துணியால் மூடியதும், அவை பிரிந்து சென்றன. இதற்குப் பிறகு, இரண்டு பாம்புகளும் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி சாலையை விட்டு விலகிச் சென்றன. 

Snake Vido: இணையத்தை பற்ற வைத்த அந்த வீடியோவை இங்கே காணலாம்:

Video Viral in Social Media: வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pooja_rangra_official என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது பேசுபொருளாக மாறி, வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். சில நேரங்களில் இயற்கையின் அற்புதமான காட்சிகள் மனிதர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன என்பதை இந்த காணொளி நிரூபிக்கிறது.

மேலும் படிக்க | Emoji ஆகும் சவுதி இளவரசர்: அந்த சிரிப்புக்கு இணையத்தையே எழுதி வைக்க துடிக்கும் நெட்டிசன்ஸ்

மேலும் படிக்க | 2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News