Lions vs crocodile: ஸ்கெட்ச் போட்டு முதலையை தூக்கிய சிங்கங்கள்! வீடியோ
முதலையை சிங்க கூட்டம் ஒன்று சேர்ந்து வேட்டையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளது. இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
சிங்கம் நிலத்தில் ராஜா என்றால், நீரில் ராஜா என்னவோ முதலை தான். இரண்டுமே வேட்டையில் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் நிலத்தில் அசால்டாக வேட்டையாடும் சிங்கம். முதலையை பொறுத்தவரை நீரில் ராஜாங்கம் நடத்தி புலி உள்ளிட்ட எந்த விலங்கையும் நொடியில் வேட்டையாடிவிடும். எவ்வளவு பெரிய விலங்கு என்பதெல்லாம் கணக்கில்லை. வேட்டையாட வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், எப்பேர்பட்ட விலங்கையும் நீருக்குள் தான் இருப்பதை கொஞ்சமும் வெளிகாட்டாமல் சோலியை முடிவித்துவிடும் முதலை.
மேலும் படிக்க | 'இங்கயும் வந்துட்டியா!!’ படுக்கையறையில் பாம்பு, பீதியை கிளப்பும் வைரல் வீடியோ
ஆனால், யார் எங்க விளையாடுகிறார்கள் என்பது தானே விளையாட்டில் வெற்றி தோல்வி இருக்கிறது. நிலத்தில் வந்தால் முதலையை சிங்கம் சும்மா விடுமா என்ன?. எனக்கே போட்டியாக நீரில் நீ ஒரு தனி ராஜாங்கமா நடத்துற, இங்க வா ராசா என்ற கோபத்தில் தனியாக சிக்கிய முதலையை சிங்க கூட்டம் ஒன்று சேர்ந்து வேட்டையாடுகின்றன. ஆனால், முதலையும் சளைத்தது அல்ல இல்லையா..! அதனால், தன்னை வேட்டையாட வந்த சிங்கங்களை இயன்றளவுக்கு கர்ஜித்து ஓட முற்படுகிறது. ஆனால் நேரம் சரியில்லை. ஏனென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிங்கங்கள் முதலையை ரவுண்டு கட்டிவிட்டன. இதனால் தப்பிப்பது கடினம்.
ben jo என்ற யூ டியூப் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. நீரில் இருந்து வெளியேறிய முதலை சற்று ஓய்வெடுக்கலாம் என நினைத்திருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு தண்ணீர் குடிக்க வந்த சிங்கங்கள் கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என்பதுபோல் கைக்கு அருகில் இருக்கும் வேட்டையை விட்டுவிட வேண்டாம் என முதலையை ரவுண்டு கட்டி வேட்டையாடுகின்றன. சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். லட்சகணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | Puppies Video: பீச்சில் விளையாடும் கலக்கல் ’குட்டிகள்’! இது Ball இல்லை பலூன் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ