See Pics: தனது காதலியை கரம்பிடித்தார் பிரபல தெலுங்கு நடிகர் நிதின்..!
தெலுங்கு நடிகர் நிதின் தனது காதலி ஷாலினியை நேற்று திருமணம் செய்து கொண்டார்...!
தெலுங்கு நடிகர் நிதின் தனது காதலி ஷாலினியை நேற்று திருமணம் செய்து கொண்டார்...!
தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் நடிகர் நிதின், தெலுங்கு திரையுலகில் முக்கிமான நடிகர்களில் ஒருவரான இவர் தனது நீண்ட நாள் காதலி ஷாலினியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்காக துபாயில் திருமணம் ஏற்பாடுகள் வெகு விமரிசையாகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் திட்டங்களும் கடைசியில் கைவிடப்பட்டன. மேலும், தனது திருமணத்தையும் ஒத்திவைத்தார் நிதின்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி அன்று நிதின் -ஷாலினியின் நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நிதின் - ஷாலினியின் திருமணம் நேற்று (ஜூலை 26) இரவு 8:30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்காக தெலுங்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ALSO READ | கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!!
ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அனைவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நிதின் - ஷாலினிக்கு வாழ்த்க்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்லத்தில் வைரலாகி வருகிறது.