உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பல நாடுகளிலும் அரசின் ஆலோசனை கூட்டங்கள் வீடியோ மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. அந்தவகையில் கனடா நாட்டில் பார்லிமென்ட் கூட்டம் ஜூம் செயலி வழியாக நடத்தப்பட்டுள்ளது. அப்போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனடாவில் (Canada) பார்லிமென்ட் (Parliament) கூட்டம் ஜூம் வீடியோ கான்பரன்சிங் வழியாக நடந்து வருகிறது. எம்.பி.,க்கள் வீடியோ கான்பரன்சிங் வழியாக கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கனடா பார்லிமென்ட்டில் லிபரல் எம்.பி.யாக இருப்பவர் வில்லியம் அமோஸ். இவர், கடந்த புதன்கிழமை நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், அரை நிர்வாணமாக தோன்றியுள்ளார். நிர்வாணமாக நின்ற அவரது போட்டோவும், வீடியோவும் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.



ALSO READ | COVID-19 Vaccine போட்டுக் கொண்டால் Dance ஆடினால் சூப்பராய் இருக்குமா? WATCH VIDEO


இதனால் மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாக வில்லியம்ஸ் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


 



 


அதில், நான் ஜாக்கிங் சென்று விட்டு உடை மாற்ற நின்ற போது தவறுதலாக கேமிரா ஆன் ஆகி விட்டது. நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்பாராதவிதமாக, இந்த சம்பவம் நடந்து விட்டது. இது போன்ற தவறு இனிமேல் நடக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR