Thailand Man Tried To Throw Grenade At Ex : காதலி மீது கை ஏறி குண்டை வீசிய காதலன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட். முழு தகவல் என்ன? இங்கே பார்ப்போம்.

Thailand Man Tried To Throw Grenade At Ex : தாய்லாந்தின் தாசனா மாவட்டத்தில் கடந்த மே 25ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. சுரபோங் தோங்னக் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவருடன் சமரசம் செய்ய நினைத்த நிலையில் அந்தப் பெண் சுரபோங் குடன் சேர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சுரபோங் தனது காதலியை கத்திரிக்கோலால் குத்த முயன்றுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் தலையிட்டு அவரை சமாதானம் செய்துள்ளனர்.
பின்னர் சூரபோங் தனது காருக்குத் திரும்பிச் சென்று, ஒரு கைக்குண்டை எடுத்து, ஊசியை இழுத்து, தன்னைத் தடுக்க கூடியிருந்த மக்கள் குழுவை நோக்கி வீசினார். அந்த கைக்குண்டு, ஒரு M26 வகை கைக்குண்டு, என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சூரபோங் வெடிகுண்டை மீண்டும் வீசி எறியும் நம்பிக்கையில் கையில் எடுத்தார். இருப்பினும், அவரது கையில் இருந்த கையெறி குண்டு வெடித்தது.
வெடிப்பின் சக்தியால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, சுரபோங் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். குண்டுவெடிப்பில் அவர் உயிர் பிழைக்கவில்லை. இதற்கிடையில், சூரபோங்கின் கோபத்திற்கு ஆளான அவரது முன்னாள் காதலி, காயமின்றி உயிர் தப்பினார். கையெறி குண்டு வெடிப்பதற்கு முன்பு அவர் வீட்டிற்கு ஓடிவிட்டார்.
குண்டுவெடிப்பில் சேதமடைந்த சுரபோங்கின் ஹோண்டா சிவிக் காருக்குள் 500 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதலியை கொலை செய்ய எண்ணிய காதலன் அதற்காக அவர் மீது வீசிய குண்டில் பெரிய twist ஆக காதலனே குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ