)
The Cry Club Mumbai : உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை நினைத்து பார்க்கும் போது அழ வேண்டும் போல இருக்கிறதா? கவலை வேண்டாம்! அதற்கென்றே புதிதாக ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Crying Club | அழுவதற்கான குழு:
உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை வெளியே கொட்டி அழ வேண்டும் என பல முறை தோன்றி இருக்கலாம். ஆனால், சில சமுதாய கட்டமைப்புகளால், அப்படி நம்மால் செய்ய முடியாமல் இருந்திருக்கும். அதற்கு இப்போது ஒரு தீர்வு வந்துவிட்டது.
Crying Clubs என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த குழுக்கள் ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்களூருவில் வளர்ந்து வருபவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பித்ததற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது? இதற்கு பின் உள்ள அறிவியல் என்ன? இதோ முழு விவரம்
மும்பையில் தொடங்கப்பட்ட குழு!
மும்பையில், “The Cry Club" என்கிற பெயரில், இந்த குழுவானது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் குழு ஜூன் மாதம் நடந்தது. உணர்ச்சிகளுக்கு பாதுகாப்பான, யாரும் உங்களை ஜட்ஜ் செய்யாத குழு இது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில், யாரும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கப்போவது இல்லை, அனைவரும் உங்கள் கதைகளை கேட்டு நீங்கள் அழுதால் சாய தோள் கொடுக்கின்றனர்.
மன நலனும் அழுகையும்:
நம் மன நலனை மேம்படுத்த, அழுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது, மன அழுத்தத்தை குறைப்பதோடு நமக்கு உளவியல் ரீதியாக ஒரு விடுதலையையும் கொடுக்கிறது. இது குறித்து நடத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளில், அழுவது நமது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நரம்பு மண்டலம்தான், நம் உடலை மன அழுத்தத்திற்கு பிறகு சாந்தப்படுத்துகிறதாம். மேலும், மனநிலையை மேம்படுத்தும் ஆக்ஸிடாசின் மற்றும் எண்டார்ஃபின்ஸ் போன்ற ஹார்மோன்களையும் இது வெளியேற்றுகிறதாம். அழுகை, நாம் துயரத்தில் இருக்கிறோம் என்பதை பிறரிடம் வெளிப்படுத்தும் விஷயமாகவும் இருக்கிறது. சிலர், தனக்கு ஆதரவான சூழலில் அழும் போது, அழுத பின்பு நன்றாக உணருகின்றனர்.
இங்கு கொடுக்கப்படும் விஷயங்கள் என்ன?
அழுதால் டிஷ்யூ, குடிக்க டீ, உணர்ச்சி ஆதரவு, புலம்பல், அழுகைகளை கேட்க நிறைய பேர் போன்ற பல விஷயங்களை அடக்கியதாக இருக்கிறது இந்த குழு. தேவைப்பட்டால், இங்கு நீங்கள் கட்டிகூட பிடித்து கொள்ளலாம். நீங்கள் அழுதால், இங்கு யாரும் உங்களை தடுக்கப்போவது இல்லை. அதே சமயத்தில் இதில் கலந்து கொள்ள, குறிப்பிட்ட தாெகையும் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ