முதலையால் கடுப்பான யானை...அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்
இந்த காணொளியில், யானையுடன் மோதிய முதலை எவ்வாறு அடிவாங்குகிறது என்பதை பார்க்கலாம்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
யானைகள் காட்டின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன. அதன்படி வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி சலசலப்பை உருவாக்குகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் யானைகள் செய்யும் பல வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் கண்டுள்ளோம். அதன்படி இங்கு ஒரு யானையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தண்ணீர் குடிக்கச் சென்ற யானையின் தும்பிக்கையை முதலை எப்படி அழுத்தி பிடித்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம். ஆனால் இதற்கு அந்த யானையின் பதிலடி தான் செம்ம வைரல்.
முதலைக்கு கற்பித்த பாடம்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், யானை கூட்டம் தண்ணீர் குடிக்க செல்கிறது. அப்போது அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்கத் தொடங்கிய போது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக கொள்கிறது. இதனால் கோபமடைந்த அந்த யானை உடனடியாக முதலையை அதன் தும்பிக்கையில் சுற்றிக் கொண்டு, அதன் கால்களால் முதலையை நசுக்க முயன்றது.
முதலை மற்றும் யானை சண்டையை இங்கே பாருங்கள்
யானை மற்றும் முதலை சண்டை தொடர்பான இந்த வீடியோ லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளது. அத்துடன் இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள், மேலும் இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | வாடா மோதி பாத்திரலாம்....நரியை ஓட விட்ட பாம்பு: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ