க்யூட்டாய் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாய்க்குட்டிகளின் டேலண்ட் டெஸ்ட் வீடியோ வைரல்
Animal Funny Video: வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டிகளின் குறும்பும், ஜாலியான விளையாட்டும், உற்சாகத் துள்ளலும் வைரலாகி வருகிறது.
நாய்க்குட்டிகள் வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன. மனதை லேசாக்கி, இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் உதவுகின்றன. நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் சமூக ஊடகங்களில் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது.
நமது கைக்குள் அடங்கும் நவீன தொழில்நுட்பமான இணையதளங்களையும் சமூக ஊடகங்களையும் ஆக்ரமித்திருக்கும் வீடியோக்கள், செல்ல பிராணிகளின் சுட்டித்தனமான தருணங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில், வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டிகளின் குறும்பும், ஜாலியான விளையாட்டும், உற்சாகத் துள்ளலும் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்
அப்படி உற்சாகமாக தடை தாண்டி ஓடி விளையாடும் இந்த வீடியோவைப் பார்த்தால் உற்சாகம் பொங்குகிறது. சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் இந்த வீடியோவை பலரும் ரசித்து பார்க்கின்றனர். நீங்களும் இந்த வீடியோவை பாருங்கள்.
நாய்க்குட்டிகள் விசுவாசத்திற்கு பேர் போனவை. ஆனால், சுறுசுறுப்புக்கும் அவற்றை அடித்துக் கொள்ளவே முடியாது. நாய்க்குட்டிகளை வைத்து செய்யப்பட்ட இந்த சோதனையில், பெரிய அளவு இடத்தில் மட்டுமல்ல, எவ்வளவு சிறிய இடத்திலும் நாய்க்குட்டிகள் எப்படி புகுந்து வருகின்றன என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
மேலும் படிக்க | Viral Video: திருமணம் மண்டபம் ஆன விமானம்... நடுவானில் கை கோர்த்த காதலர்கள்!
பெரிய கார்போர்டு வைத்து செய்யப்பட்ட தடுப்பில், பெரியது முதல் சிறியது வரை பல அளவிலான கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பெரிய கதவின் வழியாக அசால்டாக வரும் நாய்க்குட்டிகள், மிகவும் சிறிய ஓட்டைக்குள் எப்படி வரும் என்று நாம் நினைத்தால் அதிலும் புகுந்து விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
அதில் புக முடியாத நாய்க்குட்டிகள், தாண்டி குதித்து வருவது அவற்றின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதிலும் ஒரு நாய் ஒரு சிறிய வட்ட வடிவ ஓட்டைக்குள் அசால்டாய் புகுந்து விடுவதும், அது வெளியே வந்ததும், இவ்வளவு பெரிய உருவம் எப்படி குட்டி ஓட்டைக்குள் வர முடிந்தது என்ற ஆச்சரியமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ
இறுதியாக தாண்டியும் குதிக்கத் தெரியாமல், ஓட்டைக்குள் புக முடியாமல் பரிதாபமாய் குலைக்கும் குட்டி நாயின் க்யூட் ரியாக்சன் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறது.
அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் நாய்க்குட்டிகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதற்கான காரணம் அவற்றின் சுட்டித்தனமான குறும்புகள் தானே?
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ