இருமொழி என்பது இந்தி-ஆங்கிலமே என சொல்லாமல் விட்டது ஏன்?

‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என கூறிய முதல்வர், அந்த இருமொழி என்பது இந்தி-ஆங்கிலம் என்று சொல்லாமல் விட்டது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : Nov 3, 2019, 11:21 AM IST
இருமொழி என்பது இந்தி-ஆங்கிலமே என சொல்லாமல் விட்டது ஏன்? title=

‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என கூறிய முதல்வர், அந்த இருமொழி என்பது இந்தி-ஆங்கிலம் என்று சொல்லாமல் விட்டது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக போக்குவரத்து காவல்துறையினர் அளித்த அபராதத்துக்கான ஒப்புகைச் சீட்டில் தமிழ் இடம் பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில்., ‘மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று, போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகைச் சீட்டில் தமிழை காணவில்லை. ‘இந்தியே தேசியமொழி’ என அமித்ஷா பேசியபோது, ‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என்றார் முதல்வர். அந்த இருமொழி என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் இணைப்பாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை வழங்கிய தமிழ் இடம் பெறாத ஒப்புகைச் சீட்டையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Trending News