)
Nepali Wife Speaking Fluent Tamil After Possessed : எக்ஸ் பக்கத்தில் இன்று காலை @narayananh என்கிற பக்கத்தில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. இவர் அந்த பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
வைரலான பதிவு..
இந்த பதிவை வெளியிட்டிருந்தவரின் கார் துடைப்பவரின் அனுபவத்தைதான் அவர் பகிர்ந்திருக்கிறார். அவர், நேபாளை சேர்ந்தவராம். இப்போது பிழைப்பிற்காக சென்னையில் தங்கியிருக்கிறார். இவர், திடீரென ஒரு அவசரம் காரணமாக 1 மாதம் விடுப்பு எடுப்பதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். இந்த விடுப்பின் போது நாராயணன் நிதி ரீதியாக உதவி செய்திருக்கிறார். அதன் பிறகு ஏன் இந்த அவசர விடுப்பு? என்ன ஆச்சு என அவர் விசாரித்திருக்கிறார். அப்போதுதான் கார் துடைப்பவர், தனது மனைவியை சூனியகாரி பேய் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழில் பேசிய மனைவி..
அந்த கார் க்ளீனரின் மனைவி, கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். இவருக்கு இருதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது மருத்துவ ரீதியான பிரச்சனை இல்லை என்றும், இதில் வேறு ஏதோ அமானுஷ்யம் நிறைந்திருப்பதாக அந்த கணவர் சந்தேகித்திருக்கிறார்.
கடந்த 6 மாதங்களில் அவரது மனைவி சரளமாக தமிழ் பேச தொடங்கி விட்டாராம். அதுவும் ஒரு சில தமிழ் வார்த்தைகள் எல்லாம் இல்லை. தமிழை தாய்மொழியாக கொண்டவர் போல தமிழ் பேச தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்னர் அவர் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இவர்கள், நேபாளிகள் அனைவரும் வாழும் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர். இதனால் இங்கு தமிழ் பேசுபவர்களும் மிகவும் குறைவாம். இதனால், அவ்வளவு எளிதில் இவரால் தமிழ் கற்று கொண்டிருக்க முடியாது என்று கூறப்படுகிறது.
தனது மனைவியை அவர் மருத்துவமனைக்குஅழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அப்போதும் அவரது உடல் நிலை தேரவில்லையாம். அருகில் இருக்கும் மசூதிக்கும் சென்று மனைவியை மந்திரித்திருக்கிறார். அங்கு, அவர் இன்னும் அதிகமாக தமிழில் பேசியிருக்கிறார். இதனால் அவரை நேபாளத்திற்கு அழைத்து செல்லும் படியும், இங்கிருந்தால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் மந்திரித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Folks, something spooky just happened.
— Narayanan Hariharan (@narayananh) May 5, 2025
My regular car cleaner is going on a month long break. Said there’s an emergency, and he has to return to Nepal.
I offered to help with some money for the trip, but what he said next gave me chills.
He said:
“Mere wife ko chudail ne pakad…
நெட்டிசன்கள் ரியாக்ஷன்..
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் நாராயணனின் போஸ்டில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், நேபாளத்தை சேர்ந்தவர்கள் இதையெல்லாம் ரொம்ப நம்புவார்கள் என்றும், அதன் விளைவாக கூட அந்த பெண்ணின் நிலையை இவர்கள் பெரிது படுத்துவதாகவும் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர், அந்த பெண் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்வதாக கூறி வருகின்றனர்.
பொறுப்பு துறப்பு: மேற்கூறிய தகவல்ககள் ஒரு சமூக வலைதள பக்கத்தின் பதிவை வைத்து எழுதப்பட்டது. இதன் மூலம் எந்த மூட நம்பிக்கையையும் ZEE MEDIA NEWS ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ